7 1 2 3 5 6 4

பேலும் குகை : நன்கு அறியப்படாத சுற்றுலா தலம் .

பெங்களூர்: ஆகஸ்ட் 02,2016.
பேலும் குகை : இந்திய தீபகற்பத்திலேயே மிகவும் நீளமான இயற்கையாக பூமிக்கடியில் உருவாக்கப்பட்ட குகை . சுண்ணாம்பு கல் மலையில் முன்னொரு காலத்தில் நதி நீர் பாய்ந்ததால் உருவான இயற்கை குகை . ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் பேலும் கிராமத்தில் அமைந்துள்ளது . வெளியிலிருந்து பார்த்தால் மூன்று ஆழமான கிணறுகள் போன்று தோன்றும். நடுவில் இருக்கும் கிணறு தான் குகையின் முகப்பு. குகையின் முகப்பிலிருந்து 150அடி கீழே இறங்கினால் பாதாள கங்கை என்ற இடம் வருகின்றது . பின்னர் 3229 மீட்டர் துரத்திற்கு சமதரையாக நீள்கிறது . பேலும் (Belum) என்றால் சம்ஸ்க்ருதத்தில் குகை என்று அர்த்தம் . தெலுங்கில் பேலும் குஹாலு (బెల్లము గుహలు Belum Guhalu ). இந்தியாவில் இயற்கையாக அமையப்பட்ட இரண்டாவது குகை. 34 கிலோமீட்டர் நீளத்தில் அமையபெற்ற Krem Liat Prah குகை மேஹலாயாவில் உள்ளது ( இதன் குறிப்பு இறுதியில் காண்க )
இந்த குகை 1884-ல் பிரிட்டிஷ் சர்வயேர் ராபட் பிருஸ் பூட் (Robert Bruce Foote ) குழுவால் முதலில்கண்டறியபட்ட்டாலும் , சுமார் நூறு ஆண்டுகளுக்குப்பின்னர் ஜெர்மானிய நிபுணர் டேனியல் கெபுர் (H Daniel Gebauer ) தலைமையலான குழு ( இதில் நான்கு இந்தியர்களும் அடக்கம் ) 1982-84ல் இந்த குகை பற்றி நீண்ட ஆய்வறிக்கை சமர்பித்து உலகத்திற்கு தெரியபடுத்தியது 2002-ல் ஆந்திர அரசு சுற்றுலா துறையின் (APTDC) கீழ் இந்த குகை, சுற்றுலா தலமானது. இன்று இந்த குகையின் முழு நீளமான 3.5கீமீ தூரத்திற்கும் ஆய்வுகள் நடந்திருந்த போதிலும் , முதல் 1.5கீமீ வரை தான் சுற்றுலா பயணிகள் அ னுமதிக்க படுகின்றனர் . அதற்குள்ளேயே 16 வழிகள் தென்படுகின்றன . இந்த குகை quartz மற்றும் கருப்பு சுண்ணாம்பு கற்களினால் அமையப்பட்ட து .
ஆந்திர சுற்றுலாதுறை இந்த குகையில் சுமார் 2கீமீ தூரத்திற்கு சுற்றுப்புற நடைபாதை அமைத்து, மிதமான ஒளியுடன் , காற்று வசதியுடன் ஆங்காங்கு இளைப்பாற வசதி செய்துள்ளது. குகையினுள் பாலங்கள், படிகள் அமைத்து விசிட்டர்கள் குகை முழுதும் சென்றுவர வசதி செய்துள்ளது . காண்டீனும் , பொது கழிப்பறைகளும் நுழை வாயில் அருகிலேயே இருக்கிறன .

இந்த குகையில் பல்வேறுபட்ட வகையில் பாறை படிமங்கள் (itsstalactite and stalagmite formations ) அமைந்துள்ளதால் ஒவ்வொரு இடமும் அதன் அமைப்புக்கு ஏற்றவாறு அழைக்கபடுகின்றது , அவற்றில் சில:


1.சிம்ம துவாரம் சிங்கத்தின் தலை போல அமைந்திருக் கும் வாயில் .


2. கோடிலிங்க அறை : சிவலிங்கம் போல் பாறை அமைப்பு, எண்ணில்லா சிவலிங்கங்கள். இங்கு தரைலிருந்து கூரைவரை அமைந்துள்ள தூண் போன்ற பறை அமைப்பு (huge pillar formed due to stalactite and stalagmite joining together. )


3. பாதாள லிங்கம் : இங்கு எப்போதும் வற்றாத சிற்றோடை தென்கிழக்கிலிருந்து, வடமேற்காக பாய்ந்து மறைகின்றது . இந்த ஓடை பேலும் கிராம கிணறுகளுக்காக செல்வதாக நம்பபடுகின்றது


4. தியான மண்டபம்: நுழை வாயில் அருகில் அமைந்திருக்கும் இந்த இடம் புத்த துறவிகள் வாழ்ந்த இடம் போல் தெரிகிறது . இந்த அறையில் சாய்வு மேடையும் , தலையணையும் பாறையில் அமைய பெற்று இருக்கிறது ஒரு ஆச்சரியம் . இங்கிருந்த புத்த நினைவு சின்னங்கள் , அருகிலுள்ள அனத்பூர் அருங்க்காசியகத்தில் இருக்கின்றன


5.. ஆயிரம் பாம்புகள் படமெடுத்தாற்போல் கூரையின் மேற்பகுதியில் பாறைகளின் அமைப்பு மற்றுமோர் ஆச்சரியம்.
6. மற்றுமோர் பகுதியில் ஒரு பிரமாண்ட தூணும் அதன் மேலிருந்து பாறைகள் தொங்குவது (stalactites hanging ), ஆல மரமும் அதன் விழுதுகளும் போல காட்சி அளிக்கின்றது


7. சப்தஸ்வர சங்கீத அறை: : இந்த பகுதியில் இருக்கும் பறை அமைப்புகள் ,கைகளினாலோ , சிறு குசியாலோ தட்டினால் ஏழு சுரங். களும் கேட்கின்றன . ஆந்திர அரசு இந்த பகுதியை 2006-ல் பொதுமக்களுக்கு அனுமதித்தது


8. மண்டபம் : இங்கு ஒரு பரந்த கூடமும் வெட்ட வெளியும் , தர்பார் ஹால் போல் தோன்றுகின்றது .

நுழைவு வாயில்லிருந்து பார்த்தால் சிறிய குகை போன்று தோற்ற மளித்தாலும், படிக்கட்டுகளில் 30மீட்டர் கீழ் இறங்கினால் குகை பக்கவாட்டில் 3கீமீ நீள்கின்றது . இதன் முதல் பகுதியை “கெபுர் ஹால் “ Mr H. Daniel Gebauer நினைவாக அழைக்கபடுகின்றது . பேலும் குகை பற்றி இந்திய மேப்பில் கொண்டு வந்தவர் இவர்.

ஆந்திர சுற்றுலா துறை இந்தியருக்கு ரூ.50ம் வெளிநாட்டினருக்கு ரூ.300ம் நுழைவு கட்டணமாக வசூலிக்கின்றது . பேலும் குகை , பெங்களூரிலிருந்து தென் மேற்க்கே 324கீமீ தூரத்திலிருக்கிறது . அருகிலுள்ள ரயில் நிலையம் தடிபத்ரி :சென்னை – மும்பை மார்க்கம்
கிரேம் லிட் பராஹ் (Krem Liat Prah )

கிரேம் லிட் பராஹ் (Krem Liat Prah ) இந்தியாவிலேயே மிக நீளமான இயைற்கையாக உருவான குகை . மேகாலயாவின் கிழக்கு பகுதியில் ஷ்நோன்க்ரிம் மலை தொடர்ச்சியில் (Shnongrim Ridge ) காணபடுகின்றது . இதனுடன் 150 குகைகளுக்கும் மேலாக அம்மலை தொடர்ச்சியில் காணலாம் . இதன் இப்போதைய நீளம் 34கீமீ . பக்கத்து சில குகைகளும் இணைந்தால் இதன் நீளம் கூடும் . மிக அதிக அளவில் மழையும் , அதிக சூரிய ஒளியும் கிடைக்கபெற்ற மேகாலயாவின் மலை தொடர்களை ரசிப்பது மனதுக்கு இதம்..
ஆனால் இப்போது இந்த மலை தொடர்களுக்கு புதிய மிரட்டல் : இங்குள்ள மலைகள், கனிம வளம் மிக்கது . அபரிதமான கனிம சுரண்டல்கள் இந்த மலை தொடர்களை பாதிக்கும் அபாயம் உள்ளது.
to read this in english (clickhere)

enjoy... it is reloading the happiness..