7 1 2 3 5 6 4

வந்தேமாதரம்- தெரிந்ததும் , தெரியாததும் ..

வந்தே மாதரம் (தாய் மண்ணே வணக்கம்) பாடல், பக்கிம் சந்திர சட்டோபாத்தியவினால் 1882-ல் “ஆனந்த மடம் “ நாவலில் எழுதப்பட்டது என்பது எல்லோரும் அறிந்த விஷயம். இந்த பாடல், நமது தேசிய கீதத்திற்கு ( ஜன கன மன ) இணையாக நம் அரசால் அங்கிகரிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே . ஆனால் வேறு பல விஷயங்கள் இதன் பின்புலத்தில் நடந்திருக்கின்றன.

முதன் முதலில் இப்பாடல், 1896-ல் ரவீந்தரநாத் தாகூரால் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. இப்பாடல் பாரதமாதாவை போற்றி பாடப்பட்டது. இப்பாடலில் மொத்தம் 6பாராக்கள். ஆனால் அவைகளை முழுமையாய் இந்திய அரசு ஏற்றுகொள்ளவில்லை


1947-ல் சுதந்திர இந்தியாவில்,, தாகூரின் “ஜன கண மன” பாடலை தேசிய கீதமாகவும் ஏற்றுகொள்ள பட்டது ஆனால் , “வந்தேமாதரம்” பாடலை, ஏற்றுகொள்ளவில்லை காரணமென்ன ???

வந்தேமாதரம் பாடலில் முதல் 2 பாராக்கள் (சுலோகங்கள்) மட்டுமே ஏற்றுகொள்ள பட்டது .முதல் 2 பாராக்களில் இந்தியத்தாய் (தாய் மண்) என்ற பொருளில் எழுத பட்டிருக்கின்றது. பின்னர் வரும் பாராக்களில் அவை துர்கா மாதாவை போற்றி பாடுவதாகவே அமைந்துள்ளது                            ( ஆனந்தமடம் நாவல் முஸ்லிம் எதிர்ப்பை பற்றியது என்பது வேறு விஷயம்.). உருவ வழிபாட்டை ஏற்காத ,இஸ்லாம், சீக்கிய, பார்சி, கிறிஸ்துவ, மதத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இந்த எதிப்பு 1937-லிருந்தே இருந்து வந்திருக்கின்றது.


எனவே, இந்திய தேசிய காங்கிரஸ் , இந்திய நாட்டின் பெருமையை போற்றும் , தாய்மண்ணை வணங்கும் , முதல் இரண்டு பாராக்களை மட்டும் , தேசிய பாடலாக ஏற்றுகொள்ள முன்வந்தது. நீண்ட விவாதத்திற்குப்பின் , செப்டம்பர் 07, 2006, இந்திய அரசு , வந்தேமாதரம் பாடலை , எப்பொழுதெல்லாம், எங்கெல்லாம் பாடவேண்டும் என்று அறிவித்தது


வந்தேமாதரம் பாடலை , பலர் 100க்கும் மேற்பட்ட விதத்தில் இசை அமைதிருந்தனர். 1907-லிருந்து 20ஆம் நூற்றாண்டில் , பலவித இசைஅமைப்பில் , பாடப்பட்டு, பல திரைபடங்களில் காண்பிக்கப்பட்டு வந்தது


1997-ல் சுதந்திர இந்தியாவின் 50-வது ஆண்டு விழா கொண்டடபட்டபோது ARரெஹ்மானின், வந்தேமாதரம் மற்றும் தாய்மண்ணே வணக்கம் பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன. அது முதல் ARரெஹ்மானின் இசையமைப்பே எல்லார் மனதிலும் இடம் பிடித்தது .


2002-ல் BBC நடத்திய “உலகின் பிரசித்திபெற்ற பாடல் “ தேர்வில் சுமார் 7000 பாடல்கள் தெரிவு செய்யப்பட்டு அதில் “ஆனந்தமடம் “ வந்தேமாதரம் பாடல் 2ஆம் இடத்தை பிடித்தது . ARரெஹ்மானின் இசையமைப்பில் வெளியான “வந்தேமாதரம் “ பாடலை கிழே உள்ள விசையை அமுக்கி நீங்கள் கேட்கலாம்
                      INDIA celebrates 68th Independence Day. Aug 15,2014

                          
                  Play "Vanthe Matharam" ; Thanks: A R Rehman

enjoy... it is reloading the happiness..