7 1 2 3 5 6 4

சுவரோவியங்கள் (graffiti ) அழகானவையா?? -- ஆபத்தானவையா??

பெங்களூர் , ஆகஸ்ட் 12,2016
இப்போதெல்லாம் பொது இடங்களில் பெரிய அளவில் ஓவியங்கள் வரைவது, பொது சுவர்களில் அர்த்தமுள்ள ஓவியங்கள் வரைவது ஒரு கலாச்சாரமாகவே உருவாகிவருகின்றது.  மேலை நாடுகளில் பொது சுவற்றில் ,அல்லது தமக்கு சொந்தமில்லாத சுவற்றில் வரைவதோ, எழுதுவதோ குற்றமாகும். இதனை ஆங்கிலத்தில் graffiti என்று சொல்வார்கள். நம்ம ஊரை விடுங்கள், அந்த காலத்திலேயே தாம்பரம் முதல் பீச் வரை ரயிலில் பயணித்தால் , பலவிதமான, பல ரகமான விளம்பரங்கள், ஓவியங்கள் எல்லாம் சுவற்றில் காணலாம். ஏன் இப்போது கூட வெளியூர் செல்லும் போது ரோட்டோர வீடுகளின் சுவரெல்லாம், ஜவுளி விளம்பரங்களும், நகை கடை விளம்பரங்களும் நம் கூடவே வருகின்றன. ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களை கூட சுவற்றில் வரைந்து பார்த்திருக்கிறோம். இவை எல்லாம் அனுமதி பெற்றவையா இல்லையா என்பது பற்றி நாம் எண்ணி பார்ப்பதில்லை.
நகர்புறங்களில் , நம் வீட்டு சுவற்றில் , நம்மை கேட்காமலேயே அரசியல் விளம்பரம் கலர் கலராய் தோன்றும் . நாம் ஏன் என்று கேட்பதில்லை ( கேட்க முடிவதில்லை ). இவை எல்லாம் ஆங்கிலத்தில் Graffiti vandalisam என்று அழைப்பார்கள். இதுவும் ஒரு வகை வன்முறையே . தேர்தல் கமிஷனுக்கு நன்றி. கடந்த சில பொது தேர்தல்களில் இவ்வகை சுவர் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன .
சினிமா சுவர் ஓவியங்கள் ஒருவித கலாச்சாரமாகவே பார்க்கப்பட்டது. பிரமாண்டமான பேனர்களும், கட்டவுட் களும், நம்மை கவர்ந்தது அந்தகாலம். எத்தனை நாள் சபையர் தியேட்டர் வாசலில் நின்று எதிரேயுள்ள பிரமாண்டமான சினிமா பேனர்களைப்பார்த்து பிரமித்திருப்போம் . Flex bannar வந்தபின்பு சுவர் ஓவியர்கள் எல்லாம் மறைந்து விட்டனர். ( நாமும் மறந்து விட்டோம்).
இந்தியாவில் பொது சுவரோவியம் ( Graffiti ) கிரிமினல் குற்றமாகும் (The West Bengal Prevention of Defacement of Property Act, 1976,) ஆறு மாதம் சிறை தண்டனையும் , ர.10000/ அபராதமும் . ஆனால் போலீஸ் நிர்வாகமே தங்களது அலுவலக கட்டத்தில் ஓவியம் வரைய அனுமதியளித்தது பற்றி பின்னர் பார்ப்போம் .

இப்போது பொது சுவரோவியம் என்பது அர்பன் ஆர்ட் என்றழைக்கபடுகிறது ( Graffiti becomes Urban Art). இது ஒரு ஆரோகியமான மாற்றம். இந்தியாவில் முதலில் டெல்லியின் லோதி காலனி கடந்த வருடம் இந்த மாற்றத்தை சந்தித்தது . அதுகுறித்த படங்கள் கீழே ."Colours of the soul" by Senkoe. Inspired by the beauty of nature,
"Vishvaroopa" by Inkbrushnme. :: "Vishvaroopa" is an omniform of Vishnu
"The Origin of the World" by Borondo.
"The Origin of the World"by Australian artist Reko Rennie.
" Lava Tree" by Anpu Varkey
"The Lotus" by Japanese artist Suiko.
Niels Shoe Meulman painted a poem written by him.
"Dead Dahlias" by Amitabh Kumar.
"Lady Aiko" is rendition of Rani Lakshmibaiஇப்போது அர்பன் ஆர்ட் அல்லது தெரு ஓவியம் ( Urban Art / Street Art) பற்றி பார்ப்போம்.

லோதி காலனி மாற்றமே ST+ART Foundation என்ற குழுமத்தால் ஏற்பட்டது. உலகளாவிய சுவரோவிய கலைஞர்கள் பங்கேற்றார்கள் . இதையறிந்த டெல்லியின் போலீஸ் தலைவர் , போலீஸ் தலைமை அலுவலகத்தின் 10 மாடி கட்டத்தின் வெளிச்சுவற்றில் பிரமாண்டமாக ஒரு ஓவியம் வேண்டுமென்றார் . இது Graffiti Vandalisam ஆகாதா என்றனர்.. பொது சுவரோ அல்லது தனியாரின் சுவரோ , உரியவரின் சம்மதத்துடன் வரைந்தால் அது vandalisam ஆகாது என்ற போலீஸ் கமிஷனர் ,

ஓவியம் வரைய அனுமதி அளித்தார்.. ST+ART இதற்க்கு ரெடியானது . ஜெர்மானிய ஓவியர் ஹென்றிக் பெல்க்றிச் -ம் ( Hendrik Belkrich ), இந்திய அப்பு வர்கியும் (Appu Varkey ) சேர்ந்து, இந்தியாவின் மிக உயரமான சுவரோவியாத்தை வரைந்தனர். அவர்கள் வரைந்தது, மகாத்மா காந்தியின் படம். ஒவொரு போலீஸ் ஸ்டேஷனிலும் மகாத்மா படம் இருக்கும்தானே? . இந்தியாவில் Graffiti- Street Art-க்கு அரசாங்கம் இன்றும் முழுமையான அனுமதி கொடுக்கவில்லை.அங்கெங்கே , தேவையை பொறுத்து உள்ளாட்சி அமைப்புகள் (local bodies ) அனுமதி அளிக்கின்றன . எல்லா நகரங்களிலும் இப்போது அர்பன் ஆர்ட்டின் ஆதரவு பெருகிவருகின்றது. டெல்லி தெருக்களில் குப்பை தொட்டிகள் கூட அழகாக பரிமளிகின்றன


சென்னையில் , கிரீன்வேஸ் ரோடு ரயில் நிலையத்தின் வாசலில் , ஒரு மூதாட்டி , இருப்பதை பார்த்த ஒரு அமெரிக்க ஓவியர், அந்த மூதாட்டியின் ஓவியத்தை ஸ்டேஷன் எதிரே வரைந்து, தமிழில் “ வாழ்க்கை” என்றும் எழுதியது மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது..


நகர கார்பரேஷன்களும், நகராட்சிகளும், தங்களது நகரை அழகுபடுத்த, சுவரோவியர்களை இப்போது அழைக்கின்றன . ப்ளைஓவர் களும் அதன் கீழும்

கருத்துள்ள அர்பன் ஆர்ட், நாம் டிராபிக்கில் மாட்டிகொண்ட வேதனையை குறைக்கின்றது .

வெளிநாடுகளிலும் அர்பன் ஆர்ட் ஓவியர்கள் தங்கள் கற்பனைகளை பலவிதமாக வெளிபடுத்துகின்றனர் . மெட்ரோ ரயில் பெட்டியில் தேவலோக கதா பாத்திரங்கள் இருந்தால் எப்படி இருக்கும் .

சுவரோர ஓவியர்களின் திறமைகள், எண்ணங்களின் வெளிப்பாடுகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

இவர்களுக்கு நம் இந்திய அர்பன் ஆர்ட்டிஸ்ட்கள் , சளைத்தவர்களில்லை . சென்னை, பெங்கள்ளுரு, மதுரை போன்ற நகரங்கள் தெருவோர சுவரோவியாங்களால் பளபளக்கின்றன

பெங்களூரில் அர்பன் ஆர்டிஸ்ட் கள் :

மற்ற பெரு நகரங்களைப்போல் பெங்களூரிலும் , மேம்பாலங்கள் , குரும்பாலங்கள் , அடித்தட்டு சாலைகள் ( under pass ) பெருகி வருகின்றன. பெங்களூர் பெருநகர குழுமமும் ( BBMP – Baruhat Bangalore Mahanakara Palike ), தன்னார்வ தொண்டு நிறுவனக்களும் , நகரை அழகுபடுத்த தெருவோர ஓவியங்களை அமைகின்றனர். ( இல்லாட்டி நம்ம மக்களை பற்றி தெரியாதா என்ன? )

மேம்பாலத்தின் கீழே தூண்களில் வரைய ப்பட்ட ஓவியங்கள் ஒவொரு தீம்களில் இருக்கின்றன

பாலத்தின் கீழே அண்டர் பாஸ் சுவர்கள் கன்னட கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன

மேலும் சமுக வேதனைகளும் அதை எதிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் சுவரோவியங்களும் வரயைபடுகின்றன

கழிப்பறைகளின் தேவைகளை குறும்பாக சொல்கின்றனர்

இவையெல்லாம் மிஞ்சும்வகையில், BBMPயின் செயல்பாட்டின் குறை பாடுகளை மக்களின் மனதில் தனது தெரு ஓவியங்களால் ( StreetArt ) ஆழமாக பதியவைகின்றார். ஒருவா. அவர் ஒரு முதலையை தெருவுக்கு கொண்ண்டு வந்தவர் . அவர்.... நஞ்சுண்டசாமி .


பாதாள் நசுண்டசாமி :

மைசூருக்கு அருகே பிறந்த 34 வயதான இவர், ஒரு கூத்துப்பட்டறை கலைஞகர். பாதாள் என்பது மைசூரின் பிரபலமான “ரங்கையான” கலாமந்திரை சேர்ந்தவர் என்று பொருள் ( நமக்கு தெரிந்த கலா பவன் மணி மாதிரி )
பட்டபடிப்பு படிக்கும்போதே சிறிய பெட்டிக்கடையை வாடகைக்கு எடுத்து ஓவியங்கள் வரைந்து பொருளீட்டியவர் . படிப்பிற்கு பின்னர் பிரபல விளம்பர கம்பனியான Ogilvy & Mather-ல் மூன்று வருடம் விஷுவலைசர் வேலை. பின்னர் சுயதொழில் ஓவியர். போவாய் IIT-ல், அவர் வரைந்த சச்சினின் ஓவியம் பிரசத்தி பெற்றது. தற்போது பிரபல சினிமா ஆர்ட் டைரக்டர் . இவர் தெருவுக்கு வந்ததே தன தெருஓவியம் மூலம் மக்களின் வழிப்புணர்வை தூண்டுவதற்காகத்தான் . The " Crocadile Artist" என்றரியபட்டவர்.


உங்கள் தெருவில் பெரிய பள்ளங்கள், திறந்த சாக்கடை துவாரங்கள் சரி செய்யப்படாமல் இருகின்றவையா ?? கூப்பிடுங்கள் நசுண்டசாமியை, அவர் வரையும் ஓவியம் எல்லோரையும், (உள்ளாட்சி , அரசாங்க அதிகாரிகளையும் சேர்த்துதான் ) கூட்டிவந்துவிடும், அவ்வளவுதான் problem solved!!.
இவர் வரைந்த எமராஜா ஓவியம் உள்ளாட்சியினரை வெகுநாளாக கவனிக்கப்படாத சாக்கடை துவாரத்தை மூடவைத்தது. மக்களை எமனிடமிருந்து காப்பாற்றியது
இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் எதிரில் நடு ரோட்டில் ஒழுங்கரற்று கிடந்த கற்களை ( road divider median stones) வாலண்டின் தினத்தன்று இதய வடிவமாகவும் மன்மத அம்புகளாகவும் மாற்றினார்

சுல்த்தான் பாளையாவில் முக்கிய சாலையில் இருந்த பெரும் பள்ளத்தை தன் முதலையால் மூடவைத்தவர் . கடந்த ஜூன் 18,2016 –ல் பைபர் பொம்மை முதலையுடன் தண்ணீர் தேங்கியிருந்த ( குடிநீர் குழாய் உடைந்திருந்ததால் ) இடத்திற்கு வந்து அந்த இடத்தை முதலை “தடாகமாய்” மாற்றி வழக்கம்போல் எல்லார் கவனத்தையும் ஈர்த்து , பிரச்னையை சரி செய்தவர் . இவருடைய தெருஓவியம் , இவரின் சொந்த செலவு
இவர் 3D-படங்கள் வரைவதில் கில்லாடி. அவர் நடத்திய 3-D ஓவிய கன்காட்சி, வெகு நாள் பெங்களூரில் பேசப்பட்டது .

தற்போது தெருஓவியம் 3-D ஓவியம் என்று மாறிவிட்டது , வரவேற்க்கதக்க மாற்றந்தான் .


இப்போது சொல்லுங்கள் : சுவரோவியம் ( Graffiti ) ஆபத்தானவையும் அர்பன் ஆர்ட் ( Street Art / UrbanArt) அழகானவையும் தானே.
to read this in english (clickhere)

enjoy... it is reloading the happiness..