7 1 2 3 5 6 4

கடந்த வருடம் 2014.

பெங்களூர், வியாழன் 01, 2015
கடந்த வருடம் 2014-ல் , எண்ணற்ற விஷயங்கள் நடந்தேறின, மகிழ்ச்சியான, சுவையான, சோகமான என்று பலவகை. இந்த இதழில் 2014-ல் நடந்த சில சம்பவங்களை பற்றி .....
1.EBOLA: எபோலா: டைம் பத்திரிகையின் 2014 ஆண்டிற்கான சிறந்த மனிதர் விருது ; எபோலா நோய் தடுப்பு மருத்துவ குழுவுக்கு கொடுக்கப்பட்டது . 2014-ல் எபோலா வைரஸ் கிருமிகள் மேற்கு, மத்திய ஆபிரிக்காவில் வேகமாக பரவியது. குறிப்பாக Sierra Leone மற்றும் Guinea' நாடுகளில் மிக வேகமாக பரவியது. எபோலா நோய் முதலில் சாதாரண காய்ச்சல்,வாந்தி,மயக்கம் என்று ஆரம்பித்து பின்னர் உயிர் கொல்லியாக மாறும் .இந்த நோய் காரில் பரவுவதை விட,, இந்நோய்யுறறவர்களை தொடும்போது,பரவுகின்றது. இந்நோய்யுறறவர்கள இறந்தாலும்,எஒபோல வைரஸ் , இரண்டு நாட்கள் வரை அந்த உடம்பில் இருக்கும் . எனவே அத்தகைய சடலங்களை அடக்கம் செய்யும்போது உதவும் மனிதர்களுக்கு பரவுகிறது, அவர்கள் மூலம் மற்ற வர்களுக்கும் பரவுகின்றது என்று கண்டறியப்பட்டது. சுமார் 9215 பாதிக்கப்பட்டவர்களில் 4555க்கு மேலும் இறந்தனர் , சுமார் 50% க்கும் மேல். எனவே எபோலா நோய் தடுப்பு மருத்துவ குழுவுக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியே

2.ISIS:
வடக்கு இராக்கில் போரிட்டபின் கிடைத்த வெற்றி ISIS Islamic State in Iraq and the Levant என்ற போராட்ட குழு உருவாகியது. முதலில் அல் - கொய்தாவுடன் இணைந்து தீவிரவாத குழுவாக இருந்து, பின்னர் அல்-கொய்தாவிலிருந்து பிரிந்து 2013-ல் தனி போராட்டக்குழுவாக மாறியது 2013லிருந்து ISIS தீவிரவாத அமைப்பாக மாறியது ஈராக் மற்றும் சிரியாவில் ஆட்சியை கைபற்றியது. இஸ்லாமிய சட்டம் தான் இனிமேல என்று அறிவித்து , மத மாற்றம் , பெண்கள் படிக்ககூடாது, என்று வெறியாட்டம்தான்.
இந்த அமைப்பில் எத்தனைபேர் இருக்கின்றார்கள் என்று சொல்லமுடியவில்லை. இதன் ஜிஹாதிகள் எல்லா நாட்டிலும் இருக்கின்றார்கள். சிறுவர்கள் 9வயது முதல், இந்த இயக்கத்தில் சேர்த்துகொள்ளபட்டு , பொம்மை உருவங்களை துப்பாக்கியால், சுட பயிற்சியாளிக்கபடுகின்றது. சிறுவர்கள், குழந்தைகளை போராட்டத்தின்போது கேடயமாக முன்நிறுத்தி போரிடுவது, இஸ்லாமியரல்லாதவர்களை பிணைய கைதிகளாக்கி அவர்களின் தலையை வெட்டுவது போன்ற வெறிச்செயல் இவர்களது ஸ்டைல் . இந்தியா உட்பட பல நாடுகள் இந்த தீவிரவாத அமைப்பை தடை செய்துள்ளன . அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இதன் மேல் தாக்குதல் ஆரம்பித்துள்ளன


3.ஐஸ் பக்கெட் சவால் ;(ALS Ice Bucket Challenge,):
ஒரு வாளி ஐஸ் தண்ணீரை, தன் தலை மீது பிறர் கொட்டச்சொல்லி சவால் விடுவது “ஐஸ் பக்கெட்: சவால் ‘. இது amyotrophic lateral sclerosis (ALS) எனப்படும் முளை அழற்சி நோயை பற்றி மக்களுக்கு தெரிவிப்பதற்காக, கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சமுக வலை தளங்ககள் மூலம் பரவியது. சவால்விடுபவரும், சவாலை ஏற்பவரும் ALS ASSOCOATION-க்கு நன்கொடை தரவே்ண்டும். இந்த சவாலை பிரபல கோல்ப் வீரர் Chris Kennedy க்றிஸ் கென்னெடி, 11 ஆண்டுகளாக ALS நோயால் அவதிப்படும தன சகோதரியின் கணவருக்காக, ஜூலை 15,2014-ல் ஆரம்பித்துவைத்தார். இதுதான் முதல் ஆவணமாக்கபட்ட ஐஸ் பக்கெட்: சவால் . இங்கிலாந்தில் இந்த சவால் ALS ASSOCOATION-க்கு பதிலாக Motor Neurone Disease Association,-க்கு நன்கொடை சேகரிக்கப்பட்டது
தலையில் ஒரு வாளி ஐஸ் தண்ணீரை கொட்டுவது, கொட்டிக்கொள்வது, பலவித பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்று பிரபல நீரோ சர்ஜன் Dr. Brian O'Neill, எச்சரித்தார். நன்கொடைகள் பல கோடிகள் வரவும், ALS ASSOCOATION, ALS Ice Bucket Challenge,-க்கு காப்புரிமை கோரியது, ஆனால் பலத்த எதிர்ப்பினால் அடுத்த நாளே வாபஸ் வாங்கியது (August 22, 2014,) இந்த சவால் மூலம் பலர் பலவித நன்மை அடைந்தார்கள் எனலாம் ALS ASSOCOATION மட்டுமல்ல பல விளம்பர ஏஜன்சிகள் , பல டிவி நடிகர்கள் என்ற நீள பட்டியல் உண்டு.
ஐஸ் பக்கெட்: சவால் போன்று இந்தியாவில் “ரைஸ் பக்கெட்: சவால்” என்று ஒரு கல்லூரி மாணவி ஆரம்பித்து வைத்தார் . ஒவ்வருவரும் ஒரு பக்கெட் அரிசி பக்கத்திலுள்ள ஆதரவற்றோர் நிலையத்திற்கு கொடுக்க வே்ண்டும் .4.FROZEN- 3Dஅனிமேஷன் திரைப்படம்:
ரிலீஸ் ஆன முதல் நாளே 3.2மில்லியன் ப்ளூ ரே DVDக்கள் விற்று சாதனை படைத்த, குழைந்தைகள் அனிமேஷன் கார்ட்டூன் படம். எதையும் ஐஸ் ஆக்கும் அமானுஷிய சக்தி படைத்த தன சகோதரியை,ஒரு இளவரசி தன ரெயண்டீருடன் தேடும் கதை. 2013 டிசம்பரரில் வெளியிடப்பட்ட முதல் நாளே விற்பனையில் சாதனை படைத்தது.
வால்ட் டிஸ்னியின் தயாரிப்பான இப்படம் டிஜிட்டல் டவுன்லோடிலயும் முதல் இடத்தை பிடித்தது. இந்த சாதனை விற்பனையை இதுவரை முறியடிக்க படவில்லை இதற்கிடையில் The Legend of Sarilan என்ற பிரெஞ்ச் திரைப்படம் Frozen Land என்று பெயர் மாற்றி 2014 ஜனவரியில் PHASE4 COMPANYயால் அமெரிகாவில் வெளியிடப்பட்டது. உடனே வால்ட் டிஸ்னி கம்பனி, PHASE4 COMPANYமேல் காப்பி ரைட் வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றது. PHASE4 COMPANY நஷ்டஈடாக 100,000/- டாலரும், மார்ச் 2014க்குள் Frozen Land திரைப்படத்தை திரும்பபெறவும் கோர்ட் தீர்ப்பளித்தது

5.5.Oscar Pistorius: ஆஸ்கார் பிஸ்டோரிஸ் :
நவம்பர் 1986-ல் பிறந்த தென் ஆப்பிரிக்காவின் ஆஸ்கார் பிஸ்டோரிஸ, தனது இரண்டு கால்களும் முழங்காலுக்கு கிழ் எடுக்கப்பட்டு, செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட ஓட்டபந்தய வீரர். அவருக்கு முழங்காலுக்கு கிழ் எடுக்கப்பட்ட போது அவருக்கு வயது 11மாதம்தான் (ஒரு வயதுக்கும் கீழே ) முதலில் ஊனமுற்றோர் ஒலிம்பிக்ஸ் Paralympics, போட்டியிட்டவர். 2012 பாரா ஒலிம்பிக்ஸ்ல் 400 மீட்டர், 100மீட்டர், பந்தயத்தில் தங்க மெடலும் (இதுவரை முறியடிக்க படாத சாதனை), 200 மீட்டர் பந்தயத்தில் வெள்ளி மெடலும் பெற்றவர் . இவர் BLADE RUNNERஎன்று அழைக்கபட்டார்
தன பிரிடோரியா இல்லத்தில் பெப்ரவரி 2013-ல், தனது கேர்ள் பிரெண்ட் ரேவாவை (Reeva Steenkamp) தன துப்பாக்கியால் சுட்டார். தன வீட்டில் தன்னை தாக்க வந்த யாரோ என்று நினைத்து சுட்டதாக சொன்னார். ஆஸ்கார் பின்னர் கொலை செய்தற்காக கைது செய்யப்பட்டார்.
பின்னர் அக்டோபர் 2014-ல் தன தோழியை கொலை செய்த குற்றத்திற்காக 5வருடம் சிறை தண்டனை தீர்பளிக்கபட்டது

6.உக்ரைன் / கிரேமியா;
கிரெமிய தீபகற்பம் உக்ரைன் நாட்டின் தென் பகுதியிலும் , ரஷியாவின் குபன் பகுதிக்கு மேற்கிலும் அமைந்த எண்ணைவளம் மிக்க பகுதி. இர்னடுபக்கமும் கடல் சூழ்ந்த பகுதி ஒருபக்கம் கருங்கடல் (BALCKSEA), மறு பக்கம் கிழக்கில் அசாவ் கடல் ( Sea of Azov ). 2014 ஜூனில் நடந்த போராட்டத்தை முன்னிறுத்தி ரஷியா கிரேமிய பகுதியை ஆக்கரமித்து தன கட்டுபாடிற்குள் கொண்டு வந்தது.
கிரேமியா எண்ணெய் வளம் மிக்க நாடு. கிட்டத்தட்ட ஐரோப்பாவின் 30% எண்ணையை (OIL AND NATURAL GAS) இங்கிருந்துதான் ஏற்றுமதியாகின்றது, அதில் பாதி தரை பைப் லைன் வழியாக செல்கின்றது.இந்த ஆக்கிரமிப்பால் ஐரோப்பிய எண்ணெய் கம்பனிகள் ஸ்தம்பித்தன
எண்ணெய் வளம் மட்டுமல்ல, கிரேமியா தானிய உற்பத்தியிலும் பெயர் பெற்றது. உலகின் மிக முக்கியமான சோள ஏற்றுமதி நாடு அது. உலக போலீசான அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும், ஐரோப்பிய யூனியனும், ரஷியாவிற்கு பொருளாதார தடை விதித்தன . இதனால் ருஷ்ய ரூபிள் வீழ்ச்சியடைந்தது. ரஷிய சென்ட்ரல் பேங்க் கடந்த 9மாதத்திற்குள் 5முறை வட்டி விகிதத்தை மாற்றி அமைத்தது கடந்த டிசம்பர் 17=ல் வட்டி விகிதம் 10லிருந்து 17%க்கு அதிகரித்தபோது ஸ்டாக் மார்க்கட்கள் சரிந்தன. இந்திய ரூபாய் டாலருக்கு 63.07லிருந்து 63.77க்கு சரிந்தது


7.FLAPPY BIRD:Fபாளப்பி பேர்ட்:
7.FLAPPY BIRD:Fபாளப்பி பேர்ட்: டாங் நகுய்ன் என்ற வியட்நாம் டெவலப்பரால் கண்ண்டுபிடிக்கபட்ட கம்புட்டர் கேம். FROZEN போலவே டிஜிட்டல் டவுன்லோடில் முதலிடம் பிடித்தது. ஆப்பிள் APP STORE-ல் ஜனவரி 2014-ல் மிக அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட விளையாட்டு இதுதான். டாங் நகுய்ன், தனக்கு ஒரு நாளைக்கு $50,000/- இந்த APP-ன் விளம்பரம் மூலம் கிடைத்தது என்கிறார்.
இந்த கேம் நவம்பர் 2013-ல் டெவலப் செய்யபட்டாலும், ஜனவரி 2014-ல் தான் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்டது . ஆனால், பிப்ரவரி 2014-ல் ஆப்பிள் ஸ்டோரிலும், கூகிள் ப்ளே ஸ்டோரிலும், இந்த கேமின் டவுன்லோட் வாபஸ் பெறபட்டது. காரணம், பலர் இந்த கேமுக்கு அடிமையகின்றனர் (ADDICTIVE NATURE) என்கிறார். FLAPPY BIRD:Fபாளப்பி பேர்ட் ஒரு தனிமனித தயாரிப்பு, ஆனால் இது கார்பொரேட் தயாரிப்பான, மிக காஸ்ட்லியான “DESTINY”-ய் பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது. பலர் இந்த கேமுக்கு அடிக்ட் ஆகிறார்கள் என்று வாபஸ் வாங்கியதற்கு,( வருமான இழப்பு இருந்தாலும் ) டாங் நகுய்னுக்கு சலாம்.


8.8.மலேசியா ஏர்லைன்ஸ் , MH 370
மலேசியா ஏர்லைன்ஸ் , MH 370 விமானம் தரை கட்டுபாட்டுடன் தொடர்பு அறுந்த நேரம் : மார்ச் 08,2014. 02.15 (மலேசிய நேரம்)
பிளைட் நம்பர் MH370, மலேசிய விமானம் தன்னுடன் 239 பயணிகளுடன்( அதில் அதிகம் சீனர்கள் ), கோலாலம்பூரிலுருந்து, சீனா நோக்கி, மார்ச் 07,2014 இரவு புறப்பட்டது, புறப்படட்ட 5 மணி நேரத்திற்குள், தரை கட்டுபாட்டுடன் தொடர்பு அறுந்து, விமானம் காணாமல் தொலைந்து போய்விட்டது. இன்று வரை பல முயற்சி எடுத்தும், 60.000 சதுர மைல்களுக்கு, மேல், தென்சீன கடல், தாய்லாந்து கடல், இந்து மகாசமுத்ரம் என்று பல நாடுகள், இந்தியா உட்பட முயற்சி எடுத்தும், கண்டுபிடிக்க முடியவில்லை . மயமான மர்மம் என்ன? இன்றுவரை விடை இல்லை. எல்லோரும் இதை மறக்க தொடங்கினாலும், இறந்தவர்களின்/ காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு என்ன பதில் ?? இந்த விமானம் மாலத்தீவு அருகில் தாழப்பறந்தது என்று தெரிந்தவுடன் , அருகில் உள்ள, டிகோ கார்சியா (Diego Garcia) வில் உள்ள அமரிக்க கடற்படயினர் இந்த விமானத்தை சுட்டு இருக்கலாமா என்ற பலத்த சந்தேகம், சீனாவிற்கு எழுந்து ,அமரிக்க-சீன உறவு முறியுமோ? என்ற நிலை ஏற்பபட்டது. இந்த விமானம் காணாமல் போனதை மறக்க தொடங்கும்போது, மற்றொரு மலேசிய விமானம் பிளைட் நம்பர் MH17, ஜூலை மாதம் உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டது, எரிகிற நெருப்பில் எண்ணெய் விட்டது போல் ஆனது

  • AirAsia Berhad is a Malaysian low-cost airline .
  • 162 passengers were aboard missing since Sun- 28-12-2014
  • in AirAsia Flight QZ8501.
  • teams retrieve bodies from Java Sea
  • Indonesian search and rescue teams
  • begin recovering bodies as officials say scattered debris
  • is from missing flight QZ8501


9.9.சரிதா தேவி : இந்திய குத்து சண்டை வீராங்கனை
9 வயதான மணிப்பூர் சரிதா தேவி, இது வரை பல பட்டங்கள் குத்து சண்டையில் வென்றவர். LIGHT WEIGHT பிரிவின் முன்னாள் உலக சம்பியன், 2009-ல் அர்ஜுனா விருது பெற்றவர். தென்கொரியாவின் இஞ்சியான் (Incheon, South Korea, ) நகரில் நடைபெற்ற 2014 ,ஏஷியன் கேம்ஸில் சரிதா பங்கேற்று செமி பைனல் வரை 3-0 என்ற ஸ்கோரில் வெற்றி பெற்று வந்து,செமி பைனலில் தென் கொரியாவின் பார்க் லி-நாவுடன் (South Korea's Park Ji-Na) மோதினார். முதல் இரண்டு ரவுண்டுகளில் அதிக பாயிண்ட்கள் எடுத்தும், மூன்றாவது ரவுண்டில் லி-நாவை நாக்-அவுட் செய்தும் , நான்காவது ரவுண்டில் நன்றாக விளையாடியும் , சரிதாவுக்கு கிடைத்த ஸ்கோர் 0-3.
இதை நடுவர்கள் அறிவித்ததும், எலோரும் அதிர்ந்தனர், இந்திய குத்து சண்டை கோச் தனது ஆட்சேபனையை தெரிவித்தார்.. ஆனாலும் நிராகரிக்கப்பட்டது. சரிதாவுக்கு வெண்கல மெடல் கிடைத்தது. வெற்றி மேடயில், தனக்கு வழங்கப்பட்ட வேன்கள் மெடலை, வெள்ளி வென்ற லி-நாவுக்கே கொடுத்தார். அவர் அப்போது வாய் விட்டு அழுத போது, உலகமே டிவியில் பார்த்து அதிர்ந்தது.. தனக்கு அளிக்கப்பட்ட நிராகரித்த சரிதா தேவியை, உலக பெண்கள் குத்து சண்டை கமிட்டி உடனே மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பென்ட் செய்தது.
இதை நடுவர்கள் அறிவித்ததும், எலோரும் அதிர்ந்தனர், இந்திய குத்து சண்டை கோச் தனது ஆட்சேபனையை தெரிவித்தார்.. ஆனாலும் நிராகரிக்கப்பட்டது. சரிதாவுக்கு வெண்கல மெடல் கிடைத்தது. வெற்றி மேடயில், தனக்கு வழங்கப்பட்ட வேன்கள் மெடலை, வெள்ளி வென்ற லி-நாவுக்கே கொடுத்தார். அவர் அப்போது வாய் விட்டு அழுத போது, உலகமே டிவியில் பார்த்து அதிர்ந்தது.. தனக்கு அளிக்கப்பட்ட நிராகரித்த சரிதா தேவியை, உலக பெண்கள் குத்து சண்டை கமிட்டி உடனே மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பென்ட் செய்தது.


10.ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பு SCOTLAND REFRENDUM:
ஸ்காட்லாந்து தனி நாடாக வேண்டுமா?? ஆம்/ இல்லை என்பதுதான் பொது வாக்கெடுப்க்கான கேள்வி . மக்கள் ஆம், அல்லது இல்லை என்று வாக்களிக்க வேண்டும் .நவம்பர் 2013-ல் இங்கிலாந்து,ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட - ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பு மசோதா, (The Scottish Independence Referendum Bill,), ஸ்காட்லாந்து தனி நாடாக வேண்டுமென்றால் ,
பொது வாக்கெடுப்பு நடத்தி சாதாரண மெஜாரிட்டி பெற வேண்டும். இதன் படி ஸ்காட்லாந்தில் வசிக்கும் 16 வயதிற்கு, மேற்ப்பட்ட ஐரோப்பியர் அனைவரும் வாக்களிக்கலாம். பொது வாக்கெடுப்பு அக்டோபர் 2014-ல் நடைபெற்றது. ரிசல்ட் ??? இல்லை என்று 2,001,926 (55.3%)வாக்குகள் , ஆம் என்று 1,617,989 (44.7%) வாக்குகள் அதாவது ஸ்காட்லாந்து, இங்கிலாந்திலிருந்து பிரிந்து தனி நாடாக மக்கள் விரும்பவில்லை. இந்த போது வாக்கெடுப்பில் 84.6% வாக்குகள் பதிவானது இதுவரை நடந்த போது வாக்கெடுப்பில் பதிவான மிக அதிகமான வாக்குகள் மட்டுமல்ல , வரலாறும் ஆகும்.HAPPY NEW YEAR 2015


read this story in english (clickhere)


enjoy... it is reloading the happiness..