7 1 2 3 5 6 4

மங்கல்யான்- தெரிந்ததும் , தெரியாததும் ..

மங்கல்யான் இன்று (24/09/2014) முதல் செவ்வாய் கிரகத்திலிருந்து படங்கள் அனுப்ப ஆரம்பித்துள்ளது. இன்று மதியம் முதல் எதிர்பார்த்து மாலை 6மணிக்குமேல் படங்கள் வர ஆரம்பித்ததும்தான் நிம்மதி பிறந்தது . கிட்டத்தட்ட 300 நாள்களுக்கு மேல் விண்வெளியில் பயணித்து செவ்வாய் கிரகத்தை அடைந்த மங்கல்யான் தனது முதல் பணியை தொடங்கியது .




மங்கல்யான் என்றால் ??
மங்கல்யான் என்றால் “செவ்வாய்- ஊர்தி “ என்று பொருள் (சமஸ்கிருதம்: मंगल maṅgala "செவ்வாய் கிரகம் " + यान yāna "ஊர்தி,வண்டி "), (ஆங்கிலத்தில் The Mars Orbiter Mission (MOM), also called Mangalyaan "Mars-craft") செல்லமாக “MOM” என்று அழைக்கப்படுகின்றது


“சந்திராயன்” வெற்றிக்குப்பிறகு, ISRO விஞ்ஞானி, Dr.V.ஆதிமூர்த்தி, மூன்று வருடங்களுக்கு முன்னால் இந்திய அரசுக்கு செவ்வாய் கிரக ஆய்வு பற்றி அறிக்கை சமர்பித்தார். இந்திய அரசின் அனுமதிக்குப்பின் ஆகஸ்ட் 3,2012-ல் ISRO விஞ்ஞானிகள் மங்கல்யான் திட்டபணியை தொடங்கினர்.

மங்கல்யான் விண்கலம் முதலில் 28அக்டோபர் 2013-ல் வானில் ஏவபடுவதாக இருந்து பின்னர் 5 நவம்பர் 2013-ல் விண்ணில் ஏவப்பட்டது. மங்கல்யான், மிக குறுகியகாலத்தில் , 15 மாதங்களில், பெங்களூரில் தயாரிக்கப்பட்டு, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.

சாதனைகள்:
மங்கல்யான், தயாரிப்பிலிருந்து, செவ்வாய்கிரகம் அடையும்வரை பல சாதனைகள் புரிந்துள்ளது


1. மிக குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டது. – 15மாதங்கள்

2. மிக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டது.-- ரூபாய் 450 கோடி(சுமார் 67மில்லியன் டாலர்கள்), Gravity என்ற திரைப்படம் தயாரிக்க ஹாலிவுடில் சுமார் 100 மில்லியன் டாலர்கள் ஆயிற்று.(அமெரிக்காவின் “curiosity” விண்கலம் தயாரிக்க இரண்டு பில்லியன் டாலர்கள் ஆயிற்று ). அதன் 670 கீ.மீ பயண தூரத்தை கணக்கில் கொண்டால், ஒரு கீ.மீ க்கு ரூபாய்11.25 ஆகிறது (இது டெல்லியில் ஆட்டோ சார்ஜயைவிட குறைவுதான்). இந்தியன் ஒவ்வருவரும் 4 ரூபாய் செலவழிப்பதாக கொள்ளலாம்.

3. இந்தியா அனுப்பிய மங்கல்யான் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது. அமெரிக்கா,ஐரோப்பா, ரஷியா நாடுகள் தங்கள் முதல் முயற்சியில் வெற்றி பெறவில்லை. ஜப்பான், சீனா அனுப்பிய விண்கலங்கள் செவ்வாய் கிரகத்தை அடையாமல் தோல்வியடைந்தன


செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி :
மங்கல்யான், ஐந்து விதமான உபகரணங்கள் தன்னுடன் கொண்டுள்ளது. அவை செவ்வாய் கிரகத்தில் பல ஆரய்ச்சிகளை மேற்கொள்ளும். முக்கியமாக வளிமண்டலத்தில் கிடைக்கும் மீத்தேன்,ஹைட்ரஜன், போன்ற வாயுக்களையும், தண்ணீர் இருப்பு, எரிமலை போன்றவற்றை ஆராயும். அதன் 2 காமெராக்கள், செவ்வாய் கிரகத்தை மட்டுமல்லாது அதன் இரண்டு சந்திரன்களையும் படமெடுத்து அனுப்பும்.






My sincere thanks to ISRO for the pictures and video displayed here.


for more details read this in English

மேவன் (MEVAN) நமக்கு நல்லதா, கெட்டதா?

enjoy... it is reloading the happiness..