7 1 2 3 5 6 4

சிவபெருமானுக்கும் ..தீவிரவாதத்திற்கும் ..தொடர்பு???

பெங்களூர் , ஜனவரி26,2015
கர்நாடகாவின் வடமேற்க்கில் உள்ள சிறிய நகரம் பாட்கால் (BHATKAL). தன் கடற்கரையில் உள்ள “முருடீஸ்வரர்’ கோயில், மற்றும் ஜைன கோயில்கள், கடல் தாவரங்கள் நிறைந்த நேத்ரவனி தீவு, என்று பல அம்சங்கள் உள்ள சுற்றுலாதலம், மேலும் அருகில் உள்ள ஜோக் அருவி, தேசிய நெடுஞ்சாலை -17 மூலம் உடுப்பி, மங்களூர் செல்ல வசதிகள் பாட்கல்லை உலகளவில் பிரசித்தமாகியது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை (123 அடி ) எல்லோரயும் கவர்ந்திழுக்கிறது சிவஸ்தலம் மட்டுமல்ல அங்குள்ள ஜைன கோவில்களும், மாதா கோவில்களும் மிக பழமையானவை
பிரபல யாத்திரிகரும் வரலாற்று ஆசிரியருமான இபன் பதுதா Ibn Battuta (1307-1377) பாட்கல்லை பற்றி குறிப்பிட்டுள்ளார். சமண அரசர்களும் சாளுக்கியர்களும் பாட்கல்லை கைபற்றி அரசாண்டனர். நமது சோழ மன்னர்களும் பாட்கல்லை தமது ஆட்சிக்குள் கொண்டுவந்துள்ளனர். சுந்தர சோழன் என்னும் இரண்டாம் பராந்தக சோழன் தனது எல்லையை பாட்கால் தாண்டி கொங்கன கடற்கரை வரை விஸ்தரித்து அரசாண்ட விவரம் இங்குள்ள கல்வெட்டில் காணலாம் அவர் அப்போது கட்டிய சிவன் (சோலேச்வர ) கோயில் இன்றும் உள்ளது. பின்னர் அரபிக்கடல் வழியாக போர்துகிசியர்கள் வந்தமர்ந்தது வரலாறு
2011 சென்செஸ் குறிப்புப்படி பாட்கல்லில் ஆண்கள் ,பெண்கள் சரிசமாக 50 சதவீதமும், படிப்பறிவு 83 சதவீதமும், இந்து, முஸ்லிம் சமண மதத்தினரும் உள்ளனர் . இந்து-முஸ்லிம் நல்லிணக்கம் இருந்து வந்ததாகவே தெரிகின்றது

சென்னபட்டின அனுமன் கோயில் :
நகரின் நடுவில் பிரதானமான சென்னபட்டின அனுமன் கோயில் மிகவும் பழமையான பிரசித்திபெற்றது. அதன் தேரோட்டம் சுவையான பின்னணி கொண்டது. வருடந்தோறும் தேரோட்டத்தின் விழா ஆரம்பிக்குமுன், அங்குள்ள முஸ்லிம் ஷபன்டரி குடும்பத்தாரிடம் அனுமதி பெற்றபின் தேரோட்டம் நடக்கும் . முஸ்லிம் ஷபன்டரி குடும்பத்தார் எல்லோருக்கும் இனிப்புகள் வழங்கி தேரோட்டத்தை தொடக்கி வைப்பார்கள். காரணம் பலகாலம் முன்னர் ஒருமுறை தேரோட்டம் நடைபெற்றபோது , தேர் முஸ்லிம் ஷபன்டரி வீட்டின் முன்னர் அச்சு முறிந்து நின்றுபோனதாம். அந்த முஸ்லிம் குடும்பத்தார் அத்தேரை பழுது நீக்கி கொடுத்தார்களாம் .அன்று முதல் தேரோட்டத்தின் முன்னர் முஸ்லிம் ஷபன்டரி குடும்பத்தாரிடம் அனுமதி பெற்றபின்னரே தேர் இழுத்தனர். சில வருடங்கள் முன்னர் சில இந்துக்கள் அனுமதி வாங்காமல் தேரிழுத்தனர். அப்போது தேர் அந்த முஸ்லிம் ஷபன்டரி வீட்டின் முன்னர் அச்சு முறிந்து நின்றுபோனதாம்.. பின்னர் அந்த முஸ்லிம் குடும்பத்தார் அத்தேரை பழுது நீக்கி கொடுத்தார்களாம் . இவ்வாறு இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கம் கொண்ட நகரமிது


உலகின் இரண்டாம் பெரிய சிவபெருமான் சிலை: முருடிஸ்வரர் திருக்கோயில்

123அடி உயரமுள்ள சிவபெருமான் சிலையும், 20நிலைகள் கொண்ட ராஜகோபுரமும் இந்த ஊரின் சிறப்பு. வருடம் முழுவதும் இதைக் காண சுற்றுலா பயணிகள் வருகின்றனர் மூன்று பக்கம் கடல் சூழ்ந்த சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது பார்க்க மேலுள்ள வீடியோ படம்
அது சரி. இது இரண்டாவது உயரமான சிலை என்றால் உலகின் முதல் உயரமான சிலை எங்குள்ளது ??
நேபாளத்தின், காட்மந்து நகரின் அருகிலுள்ள 143அடி உயரமுள்ள கைலாசநாத் மகாதேவ் சிலைதான் உலகின் மிக உயரமான சிவப்ருமான் சிலை .நியூயார்க்கின் சுதந்திரதேவி சிலையை விட சற்று உயரம் கம்மி . பார்க்க வலது புறமுள்ள வீடியோ படம்


தீவிரவாத தொடர்பு :
இத்தனை அமைதியான பத்கால், தீவிரவாத கேந்திரமாக மாறியது எப்படி??
சமிபகாலத்தில் பத்கால் என்றாலே தீவிரவாதம் என்று உலகளவில் அறியப்பட்ட நகரம். காரணம், தீவிரவாத குழுவான, இந்திய முஹஜித்தின் தலைவன் யாசின் பத்கல், மற்றும் ரியாஸ் அஹமது ஆகியோர் இந்த ஊரில் மக்தூம் காலனியில் பிறந்து வளர்ந்தவர்கள்
சமிபத்தில் ஜனவரி 20,2015-ல் பெங்களூரில் குண்டு வெடிப்புக்காக கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகளும். பத்கல்லை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது. இவர்கள் பெங்களுரின் காக்ஸ் டவுன் பகுதியில் ஒரு அப்பார்ட்மெண்டில் , பிஸினெஸ் செய்வதாக கூறி கடந்த 2 வருடமாக வசித்து வந்தவர்கள். அவர்களிடமிருந்து 5கிலோ நைட்ரேட் 3 கிலோ ஜெலட்டின் குச்சிகள், 10 எலக்ற்றானிக்ஸ் சர்கிட்ட்டுகள், 3-4 சாட்டிலிட் போன்கள் கைபற்றபட்டன. எனவே பத்கல் என்றாலே தீவீரவாதிகளின் கூடாரம் என்று உலகளவில் அறியப்பட்டதொன்று.

ஆனால் பத்கல்லை சேர்ந்த ஊடகவியலார் ரஸா மான்ன்வி இதை ஒத்துக்கொள்ளவில்லை. “எங்கள் ஊரின் மீது போலிசும் பத்திரிகைகளும் சுமர்த்தும் பழி இது என்று கூறுகின்றார்”. பெங்களுரிலிருந்து 488கீமி தூரத்திலிருக்கும் பத்கல்லை சேர்ந்த மர வியாபாரியும், ஹிந்து சபாவின் தலைவருமான சுரேந்திர ஷேன்போக், இதையே சொல்கிறார் “நான் இந்த ஊரை சேர்ந்தவன், நீங்கள் சொல்வதெல்லாம் பேபரில்லும், டிவி யிலும் வருகின்ற செய்திகள். இங்கு மத நல்லிணக்கம் பலமாகவே உள்ளது. மசூதி வாசலில் இந்துக்கள் காய்கறி விற்பதும், அவர்களுக்கு முஸ்லிம் கடையிலிருந்து டீ வருவதும் வாடிக்கையான ஒன்று. முஸ்லிம் வீட்டில் இந்துக்களும், இந்துக்கள் வீட்டில் முஸ்லிம்கள் வேலை பார்ப்பதும் வாடிக்கையான ஒன்று.” என்கிறார்

சிவபெருமானுக்கு தொடர்புடைய பத்கல்லை தீவிரவாத நகரமாக மாற்றுவது
யார் கையில்??
தீவீரவாதத்தை ஒழிப்போம் மத நல்லிணக்கம் வளர்ப்போம்


to read this in english (clickhere)


enjoy... it is reloading the happiness..