7 1 2 3 5 6 4

விம்பிள்டனில் இந்திய வீரர்கள் ... இதுவரை

பெங்களூர் ஜூலை 14, 2015
கிரிகட்டே இந்தியாவின் விளையாட்டு என்று நினைக்க தோன்றும் இந்நாளில் , பல இந்திய வீரர்கள் விம்ப்ள்டனில் 1908-ஆம் வருட முதலே சாதனை படைத்துள்ளனர் .
2015-ஆம் ஆண்டு, விம்பிள்டனில் இந்திய வீரர்கள் முன்று சாம்பியன்ஷிப்களை வென்று சாதனை படைத்துள்ளனர. கடந்த வர சனி, ஞாயிறில் (ஜூலை 11-12 ),இந்திய வீரர்கள் சானியா மிர்சா, லியாண்டர் பயஸ், மற்றும் அறிமுக ஆட்டக்காரர் 17வயது சுமித் நாகல், ஆகியோர் விம்பிள்டனில் கிரான்ட் சலாம் (GRAND SLAM)பட்டங்களை வென்றுள்ளனர்
சானியா மிர்சா, முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் மார்டினாஹிங்கிஸ் (34 வயது) ஜோடி இந்த ஆண்டு இரட்டையர் பட்டம் வென்றது. இதன் மூலம் சானியா மிர்சா, கிரான்ட் சலாம் (GRAND SLAM) வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமை அடைந்தார். சானியா மிர்சா, 2005-ஆம் ஆண்டு முதல் விம்ப்ள்டனில் விளையாடி வருகிறார் . இம்முறை 42வயதான லியாண்டர் பயஸ், முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் மார்டினாஹிங்கிஸ் (34 வயது) ஜோடி சேர்ந்து, கலப்பு இரட்டையர் பட்டம் வென்றார். இது பயஸின 16-வது கிரான்ட் சலாம் (GRAND SLAM) பட்டம். நேரடி செட்களில் வென்றது ஒரு சரித்திரம்.
அறிமுக ஆட்டக்காரர் 17வயது சுமித் நாகல், வியட்நாமின் ஹோங் லி யுடன் ஜோடி சேர்ந்து சிறுவர்களின் இரட்டையர் பட்டம் (boys doubles trophy. ) வென்றது பத்திரிகைகளின் அன்றைய தலைப்பு செய்தியானது. இதுவும் நேரடி செட்களில் வென்றது ஒரு சரித்திரம்.

இந்தியா இதுவரை விம்பிளடனில் இப்படி சாதனை புரிந்ததில்லை. 2015-ஆம் ஆண்டு இந்திய டென்னிஸ் ரசிகர்களின் விருந்தாக அமையும். பயஸ் ஜோடி இந்தாண்டு ஆஸ்திரேலியன் ஓபன் பட்டம் வென்றதுபோல், ரசிகர்கள், இந்த ஜோடி அமரிக்கன் ஒப்பனையும் வெல்லும் என்று எதிர்பார்க்கின்றனர்
விம்பிள்டனில் இந்திய வீரர்கள் ... இதுவரை:
விம்பிள்டனின் சரித்திரத்தை பார்த்தோமானால், பல இந்திய வீரர்கள் விம்ப்ள்டனில் 1908-ஆம் வருட முதலே சாதனை படைத்துள்ளனர் ( பிரிட்டிஷ் இந்தியாவும் சேர்த்து) அந்த சரித்திரத்தை கிழே பார்க்கலாம்.
சர்தார் நிஹல் சிங் : விம்பிளடனில் விளையாடிய முதல் இந்தியர். 1908 முதல் 1910 வரை ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் விளையாடியவர். 1910-ல் முன்றாவது சுற்று வரை வந்தவர்.
1921-ல் The All India Lawn tennis Association (AILTA), ஆரம்பிக்கப்பட்டபின், இந்தியா டேவிஸ் கப் (Davis Cup) போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தது. முதல் வருடமே செமிபைனல்வரை வந்தது. அப்போது டேவிஸ் கப் டீமில் இருந்த ஆங்கிலேயர் சிட்னி ஜாக்கப்(Sydney Jacob) ஐ சி எஸ் அதிகாரி, விம்பிளடனில், இந்தியாவிற்காக விளையாடினார்.
2015-ல் அறிமுக ஆட்டக்காரர் 17வயது சுமித் நாகல, ஜோடியின் வெற்றி , 60 வருடங்களுக்கு முன்னர், முதன் முதலில் ராமநாதன் கிருஷ்ணன் ( நம் KRISH TV) விம்பிள்டனின் Junior Champion ஆக பட்டம் பெற்றது நினைவுக்கு வருகிறது அவரே முதல் இந்திய ஜூனியர் விமபிள்டன் சாம்பியன். ரமேஷ் கிருஷ்ணன் , அவரது மகன் 1979-ல் விம்பிளடனில் ஜூனியர் பட்டம் பெற்றார். கிருஷ்ணனின் அப்பா டி.கே. இராமநாதன் சம்பியன்களின் கோச் என்று அந்த காலத்திலேயே பெயர் பெற்றவர்.
இந்தியாவின் விஜய் அமிர்தராஜ் விம்பிளடனில் தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் ( 1972 முதல் 1990 வரை ) விளையாடி 90 ஆட்டங்களில் பங்கேற்றவர் . 1981-ல் விஜய் அமிர்தராஜ் விம்பிளடனில் காலிறுதி வரை வந்து, ஜிம்மி கானர்சிடம் தோற்றார். அதே வருடம், விம்பிளடனில், ஆண்கள் ஒற்றையர், ஆண்கள், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர், பிரிவுகளில் காலிறுதியை எட்டியது, குறிப்பிடத்தக்கது. இப்போது 61வயதாகும் விஜய் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டென்னிஸ் வர்னையாளர்.
மகேஷ் பூபதி பற்றி சொல்லாமல் இந்த பட்டியல் முழுமையாகாது. 1997-ல் பிரன்ச் ஒபனில் இரட்டையர் பட்டம் வென்று , கிரான்ட் சலாம் (GRAND SLAM) பெற்ற முதல் இந்தியர். இரண்டு ஆண்டுகளுக்குப்பின்னர் அவர் லியாண்டர் பயசுடன் ஜோடி சேர்ந்து அவ்வருடத்தின் நான்கு கிரான்ட் சலாம் (GRAND SLAM) போட்டிகளிலும் இறுதி வரை வந்தவர். அந்த ஆண்டு,1999-ல், இந்த ஜோடி பிரன்ச் ஓபன் மற்றும் விம்பிளடன் இரடையர் பட்டம் வென்றது., ஆஸ்திரேலியன் ஓபன் மற்றும் அமரிக்க ஒபன் போட்டிகளில் இரண்டாம் இடத்தை பிடித்தது
read this in English (clickhere)THANKS: Pictures shown here are adopted from world wide web sources.

enjoy... it is reloading the happiness..