கிரிக்கெட்டில் பவுன்சர் பந்து வீச்சு தேவையா ???
ஆஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர்
(செவ்வாய்க்கிழமை-18/11/2014.) கிரிக்கெட் போட்டியின்போது
பவுன்சர் பந்தை அடிக்க முயன்ற ஹியூஸூக்கு கழுத்தில் அடிபட்டு
பலத்த காயம் ஏற்பட்டது 2 நாட்கள், பல மணி நேரப்
போராட்டங்களுக்குப் பிறகு( வியாழக்கிழமை 20/11/2014) மரணம்
அடைந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த 5 ஆண்டுகளில்
தனது ஆட்டத்தாலும், செயலாலும் அனைவரையும் கவர்ந்த பிலிப்
ஹியூஸின் மரணம் கிரிக்கெட் உலகை உலுக்கியிருக்கிறது.
அவரது துர்மரணம் கிரிக்கெட் விளையாடும்போது நியூசவுத் வேல்ஸ்
பவுலர் சான் அபாட் வீசிய பவுன்சர் பந்தை எதிர் கொள்ளும் போது,
கழுத்தில் அடிபட்டு ரத்த நாளங்கள் வெடித்து மூளையில் ரத்தம்
பாய்ந்து மரணம் அடைந்தார் .
இப்போது, நமது மனதில் இரண்டு கேள்விகள் எழுகின்றன:
1. கிரிக்கெட் உண்மையிலேயே GENTLEMEN GAMEதானா
2. கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் பவுன்சர்களை தாக்குபிடிப்பார்களா, பவுன்சர்கள் தேவையா ? ஏன் தடை விதிக்கக்கூடாது ??
முதல் கேள்விக்கு, பளிச்சென்று நம் மனதில் தோன்றுவது ,
கிரிக்கெட் உண்மையிலேயே GENTLEMEN GAME கிடையாது, அந்த
வார்த்தை பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய மாயை.. 1930 களில்,
இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாடிலைன் (Bodyline
bowling) என்று சொல்லி பவுன்சர்களை உருவாக்கினார்கள். இப்போது
50-50, T20 என்று நேரத்தை சுருக்கி ரன்களை
குவிக்கவேண்டிருப்பதால், IPL போன்றவை கிரிக்கெட்டை வியாபார மயமாக்கி
விட்டது. எனவே எந்த டீமும் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
இரண்டாவது கேள்விக்கு பதிலை ஆராயும்போது, பவுன்சர் பிறந்த கதையை முதலில் பார்க்கலாம.
பவுன்சர் பிறந்த கதை :
அதி வேகத்தில் பேட்ஸ்மேன் முன்னால்
நெஞ்சுக்குமேல் எகிறி வருவதுபோல் (short pitched bowling),
பந்து வீசுவதுதான் பவுன்சர். (பார்க்க படம்).
1930களில் ஆஷஸ் கப்புக்காக, ஆஸ்திரேலியாவை ,தோற்கடிக்க
இங்கிலாந்து அணி செய்த வியுகம் பவுன்சர் பிறக்க வழி செய்தது..
பந்து பேட்ஸ்மேன் முன்னால் தரையில் பட்டு வேகமாக
தலையொட்டி வருவதுதான் பவுன்சர் (BOUNCER). இந்த வகை பவுலிங்
அனுமதிக்கப்பட்ட ஒன்று..
;தரையில் படாமல் தலை நோக்கி வந்தால் அது பீமர் (BEEMAR),இது
தடை செய்யப்பட்டது .
பேட்ஸ்மேன் ஒரு எட்டு பின்னல் வந்து ,பந்தை. பேட்டால் வளைத்து
(HOOK SHOT) அடித்தால், பவுண்டரி நிச்சியம், சரியாக அடிக்காமல்
தொட்டு வைத்தால் CATCHதான்.
பேட்ஸ்மேன் பந்தை சரியாக கணிக்காமல் விட்டால் , அது ஆட்கொல்லி
தான்
. பவுன்சரை எதிர் கொள்ளுவது , “கரணம் தப்பினால் மரணம்” தான்
கிரிக்கெட்டின் “LAWS OF CRICKET” பவுன்சரை அனுமதிக்கிறது
பேட்ஸ்மேனின் திறமை தான் முக்கியம்.
BODY LINE BOWLING:
1930-ல் ஐந்து டெஸ்ட்களில் 974 ரன்கள்
குவித்து இங்கிலாந்தை மிரட்டிய டான் பிராட்மேனை ( Sir Don
Broadman) நிலை குலையசெய்து , ஆஷஸ் திரும்ப பெறுவது,
அதற்குண்டான வியூகங்களை வகுப்பது இங்கிலாந்து கேப்டனுக்கு
சவாலாக இருந்தது.
கேப்டன் டக்லஸ் ஜார்டின் (DOUGLAS
JARDINE), தனது வேக பந்து வீச்சாளர் ஹெரல்ட் லர்வூட் (HERALD
LARWOOD)இணைந்து BODYLINE BOWLINGஐ அரங்கேற்றினர்.
பாடி லைன் என்பது பவுன்சரை பேட்ஸ்மேன் உடலை
உரசிசெல்லும்படி பந்து வீசுவது.
அந்தகாலத்தில் ஹெரல்ட் லர்வூட் வீசிய பந்துகளின் வேகம் மணிக்கு
96மைல். . . . . . . (
இதுவரை 99.7MPH- ஜெப் தாம்சன் வீசியது தான் உலக ரிகார்ட் )
163கிராம் பந்து அந்த வேகத்தில் வருவததென்பது,AK47 புல்லட்டின்
வேகத்திற்கு சமம்.
லெக் சைடில் பீல்டர்களை குவித்து ஆஸ்திரேலியன் டீமை
திணறடித்தனர்
இங்கிலாந்தின் எண்ணமே ப்ரட்மனை ரன்
எடுக்காமல் வெளி ஏற்றுவதுதான. (பார்க்க வீடியோ ) அதேபோல்
பிராட்மன் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்
. . ( ஆனால் அடுத்த இன்னிங்க்சில் 103ரன்கள்
குவித்தார் ).
அவருடைய சராசரி 56.57,க்கு குறைந்தது இது அவருடைய மிக மோசமான
ரெகார்ட் .
இங்கிலாந்து அணி பாடி லைன் பவுலிங்கில், ஆஸ்திரேலியாவை
கலங்கடித்தனர்.
ஹெரல்ட் லர்வூட் (HERALD LARWOOD)வீசிய பந்து, ஆஸ்திரேலியாவின்
பெர்ட் ஓல்ட் பீல்டின் மண்டையை உடைத்தது. ஆஸ்திரேலியா ஆஷஸ்
கப்ஐ இழந்தது
பாடி லைன் பவுலிங்கை முன்னோடியாக வைத்து,
1969-70 களில் நிறைய வேக பந்து வீச்சாளர்கள் உருவானார்கள் ,
குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரே நேரத்தில் 5 வேகபந்து
வீச்சாளர்களை கொண்டு உலக கிரிக்கெட்டை தன ஆளுமைக்குள் கொண்டு
வந்தது.
இதே போல் உலகில் எல்லா அணிகளில் வேகபந்து வீச்சாளர்கள்
உருவானார்கள். இந்திய அணியில் ஸ்ரீகாந்த், இஷாந்த் ஷர்மா,
இர்பான் பதான் குறிப்படபடுபவர்கள் <
சரி, பவுன்சர்களுக்கு கட்டுப்பாடே கிடையாதா ??
1970லிருந்து 1990வரை பவுன்சர் மூலம் எதிரணியை மிரட்டிகொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ICCதன் புதிய சட்டங்கள் மூலம், பவுன்சர் வீச கட்டுப்பாடு விதித்ததது
1. ஒரு பவுலர் ஒரு பேட்ஸ்மேனுக்கு ஒரு ஓவரில் ஒரு பவுன்சர் தான் போடவேண்டும்
2. 1994-ல் இரண்டு பவுன்சர் வரை போடலாம் , அதற்கு மேல் போட்டால் , ஒரு பாலுக்கு 2 ரன் எக்ஸ்ட்ரா கொடுக்கப்படும்.
3.2001-ல் ஒரு பால் ஒரு ஓவர் என்ற பழய ரூலுக்கே வந்தது
4.29/10/2012-ல் இது ஒரு நாள் போட்டிக்கும் அமுலுக்கு வந்தது
5. அதேபோல் T-20 போட்டிக்கும் அமலுக்கு வந்தது
எதிரணியை மிரள செய்யும் பவுன்சர்ஐ தடை செய்ய வேண்டுமா ???... வேண்டாமா ??? .......... மேலும் படிக்க >>>
for more details read this in English
- அடிலெய்ட் டெஸ்டின் முதல் பந்து பவுன்சராக இருக்க வேண்டும்: பாண்டிங் விருப்பம்.
- பிலிப ஹியூஸின் அகால மரணத்தினால் வீரர்கள் மத்தியில் எழுந்துள்ள
- ஒருவகை கசப்புணர்வுக்கு மருந்து டெஸ்ட் போட்டியின் முதல் பந்து பவுன்சர்தான் ..
- என்கிறார் ரிக்கி பாண்டிங்...
- முதல் இந்திய-ஆஸி டெஸ்ட் டிசம்பர் 09-ல் தொடங்குகிறது ..
- பிலிப் ஹியூஸ் பவுன்சர் தாக்கி அகால மரணமடைந்ததையடுத்து
- ஆஸ்திரேலிய நாடே துக்கம் அனுஷ்டித்து வருகிறது...
- இந்நிலையில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும்,
- வலைப்பயிற்சியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களும்
- பவுன்சர்களை சரமாரியாகவே வீசினர்....!
- அடிலெய்டில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் முதல் நாள் ஆட்டத்தில்,
- மொகமது ஷமி, வருண் ஆரோன், உமேஷ் யாதவ் சுதந்திரமாக பவுன்சர்களை
- கிரிக்கெட் ஆஸ்திரேலியா பேட்ஸ்மென்களுக்கு எதிராக வீசினர்....
- நன்றி ராய்ட்டர்ஸ் 07/12/14