7 1 2 3 5 6 4

பிரெஞ்ச் ஓபெனில் (Roland Garros) ஜோகொவிக்கின் கடந்த 10 வருட ஏமாற்றங்கள் :

பெங்களூர் மே 22,2016
உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிக் இதுவரை பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றதே இல்லை.
இம்முறையாவது ஜோகோவிக் பிரெஞ்ச் ஓபன் ஜெயிப்பாரா ??
இந்த வருடம் ஜோகோவிக் பிரெஞ்ச் ஓபன் பட்டம் வெல்வார் என்பதும், செரீனா வில்லியம்ஸ் மகளிர் பட்டம் வென்று புதிய சாதனை புரிவார் என்றும் பலருடைய எதிர்பார்ப்பு .
இம்முறையாவது ஜோகோவிக் பிரெஞ்ச் ஓபன் ஜெயிப்பாரா ??
பிரெஞ்ச் ஓபன் போன்ற களிமண் களத்தில் (clay court ) பல வெற்றி களை பெற்றி இருந்தாலும் , உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிக் இதுவரை பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றதே இல்லை. இதுவரை 12 முறை பிரெஞ்ச் ஓபன் களம் கண்டு , கடந்த நான்காண்டில் முன்று முறை பைனலில் தோற்றவர் . கடந்தாண்டு Clay king என்று அழைக்கப்படும் நடாலை (Rafael Nadal) காலிறுதியில் தோற்கடித்தவர் சாம்பியன்ஷிப் வெல்வார் என்று எதிர்ப்பார்க்கப் பெற்று பைனலில் வாவ்ரின்காவிடம் தோற்றவர் .இதனால் Golden Salm பட்டத்தை தவற விட்டவர் .
2015-ல் மற்ற முன்று கிராண்டஸ்லாம் பட்டங்களும், 2016-ல் ஆஸ்திரேலியன் ஓபன் பட்டம்வென்று உலகின் முதல் நிலையில் இருக்கும் ஜோகோவிக் பிரெஞ்ச் ஓபன் வெல்வாரா ?? ஏன் சந்தேகம் , அவருடைய தொடர் வெற்றி ( winning streak) சமிபத்தில் மோன்டே கார்லோ மற்றும் இத்தாலியன் ஒபென்லில் ஆண்டி முர்ரேயிடம் (Andy Murray) தோற்றதில் முடிந்தது . இந்த பிரெஞ்ச் ஒபன் வென்றால் நான்கு கிராண்டஸ்லாம் வென்ற 8வது வீரர் ஆவார்
( ஜோகொவிக்கின் கடந்த பத்தாண்டு பிரெஞ்ச் ஒபன் சாதனைகளும், வேதனைகளும் மற்றும் Clay King, நடாலை பற்றிய செய்திகள் வேறொரு பகுதியில் .... )
ஆண்டி முர்ரே (Andy Murray) வெல்வாரா ??
ஆண்டி முர்ரேயும், ஜோகோவிக் போல பிரெஞ்ச் ஓபன் வெல்ல முயற்சிக்கிறார் . வென்றால் இருவருக்கும் இது பிரன்ச் ஓபெனில் முதல் சாம்பியன் பட்டம் . இத்தாலியன் ஓபெனில் ஜோகொவிகை வென்றதால் முர்ரே இப்போது தெம்பாய் இருக்கிறார்
இவர்களிருவரும் தெம்பாய் இருக்க மற்றொரு காரணம் ?? 65 கிராண்டஸ்லாம் தொடர் வெற்றிகள், 1999 முதல் அமெரிக்க ஓபன் இவர் இல்லாமல் நடந்ததில்லை. 17 வருடங்களுக்கு பிறகு தான் பிரெஞ்ச் ஓபனில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்தவர் . அவர் Roger Federer. அவருடைய தீராத முதுகுவலியும், சமிபத்திய முழங்கால் ஆபேரஷனும் , அவரை விளையாட்டில் பங்கு பெறாமல் செய்துள்ளது. பெடரர் 17 கிராண்டஸ்லாம் பட்டங்கள் வென்றதை தொடர முடியுமா ?? எதிர் வரும் விம்பிளடனில் பங்கு பெறுவதை பொருத்தது
நடால் எங்கே ??
இதுவரை யாரும் பெற்றிடாத பிரெஞ்ச் ஓபன் 9 வெற்றிகள் ( அவற்றில் நான்கு தொடர் வெற்றிகள் 2005 முதல் 2008 வரை மற்றும் 2010 முதல் 2014 வரை ஐந்து தொடர் வெற்றிகள் அவரை King of Clay என்று அழைக்க வைத்தது . 2009-ல் பெடரரும், 2015-ல் வாவ்ரின்கவும் வெற்றி பெற்றனர் )
2015-ல் பல மோசமான தோல்விகளை கண்ட ஆனால் தன்னம்பிக்கை கொண்ட நடால் , கடந்த மாத மாண்டே கார்லோ வெற்றிக்கு பிறகு பிரெஞ்ச் ஓபெனில் ஜொலிப்பார் என்றும், இம்முறை பட்டம் வென்று 10 முறை வென்ற சாதனையும் படைப்பார் என்றும் எதிர்பார்க்கபடுகின்றார்.


கடந்தாண்டு சாம்பியன் வாவ்ரின்காவின் நிலை என்ன ??
தற்போது மிக மோசமான பார்மில் இருக்கும் வாவ்ரின்கா இம்முறை பட்டம் வெல்வது மிக கடினம் . ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியன் , இம்முறை பட்டதை தக்கவைத்து கொள்ள முயன்று இரண்டாவது சுற்றிலேயே வெளியேறியது துரதிர்ஷடம். இம்முறை செமிபைனல் வரையாவது வருவாரா ??

என்னுடைய கணிப்பின் படி , ஜோகோவிக் , முர்ரே 2016 பைனலில் மோதிகொள்வார்கள். ஜோகோவிக் சாம்பியன் பட்டம் பெறுவார்.
பிரெஞ்ச் ஓபெனில் (Roland Garros) ஜோகொவிக்கின் கடந்த 10 வருட ஏமாற்றங்கள் :2005: முதல் பயணம் :
தன் 18 வயதில் ஜோகோவிக் பிரன்ச் ஓபெனில் விளையாட துவங்கினார் . ஆனால் காயம் காரணமாக இரண்டாம் சுற்றிலேயே வெளியேறினார் .
2006: காலிறுதிவரை :
19 வயது துடிப்பான இளைஞன் ஜோகோவிக் அந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபெனில் முதல் முறையாக காலிறுதியை அடைந்தான் . ஆனால் காலிறுதியில் அன்றைய சாம்பியன் நடாலுடன் விளையாடும்போது, தான் இரண்டு செட்கள் பின் தங்கி இருந்தபோது (நடால் 2 – 0) முதுகுவலியால் வெளியேறினான்
2007: வெற்றியை நோக்கி :
ஜோகோவிக் முதன் முதல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார் . வழக்கம்போல் நடால் என்ற முட்டுக்கட்டை. நடாலிடம் நேர் செட்களில் தோற்றார் . அவ்வருடம் நடால் தன் முன்றாவது தொடர் வெற்றியை பதிவு செய்தார்
2008: தன் வெற்றி பாதையில் :
ஜோகோவிக் , ஆஸ்திரேலியன் ஓபெனில் பெற்ற வெற்றி , எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது . அது அவரின் முதல் கிராண்டஸ்லாம் வெற்றி. ஆனால் இம்முறையும் , தோல்வியே கண்டிராத நடாலிடம் நேர் செட்களில் ஜோகோவிக் தோற்று வெளியேறினார். 2009: இப்போதும் பின்னடைவுதான் :
எதிர்பாராதவிதமாக, ஜோகோவிக் முன்றாவது சுற்றில் , காலிறுதியை தொடாமலேயே வெளியேறினார்.
2010: வெற்றி எங்கே? :
ஜுர்கேன் மெய்சருடன் காலிறுதியில் முதல் இரண்டு செட்கள் வென்றபின் மற்ற முன்று செட்கள் தோற்று வெளியேறினார்
2011: அரையிறுதியில் ...:
இந்த வருடம் தன் 43 வது தொடர் வெற்றியுடன் முன்று கிராண்டஸ்லாம் வெற்றி உட்பட , ஜோகோவிக் பிரெஞ்ச் ஓபெனில் அரையிறுதிக்கு முன்னேறினார். அவர் எதிர் கொண்டது அன்றைய நம்பர் 1 சாம்பியன் ரோஜெர் பெடரெர் . ஜோகோவிக் தன தொடர் வெற்றியை இழந்தார். பெடரர் தோற்கடிக்க எடுதுகொன்ண்ட நேரம் 3 மணி 39 நிமிடங்கள்
2012: பைனலில் ஜோகோவிக் :
இப்போதும் நடாலுடன் மோதல். நாலு மாதங்களுக்கு முன், ஆஸ்திரேலியன் ஓபெனில் நடாலை தோற்கடித்து பெற்ற 5செட் சரித்திர வெற்றி , இப்போது பயன் தரவில்லை. அப்போது பிரெஞ்ச் ஒபெனை குத்தகைக்கு எடுத்திருந்த நடால் நேர் செட்களில் ஜோகொவிகை தோற்கடித்தார்
2013: வெற்றியின் விளிம்பில் :
இம்முறை பைனலில் ஜோகோவிக் நடாலை தோற்கடிக்க வேண்டியது, ஆனால் நடந்தது என்ன??. நடால் முதல் செட்டையும் ஜோகோவிக் இரண்டாவது, முன்றாவது செட்களையும் வென்றபின் நாலாவது செட்டில் 5-2 என்ற முன்னிலையில் ( ஒரு கேம் வென்றால் ஜோகோவிக் சாம்பியன்தான் )நெட் அருகில் செய்த தவறால், எதிரி நடால் 9-7 என்ற கணக்கில் வென்று , இறுதி செட்டையும் வென்றார். 4மணி 37 நிமிடங்கள் போராடி ஜோகோவிக் தோற்றார்
2014: மறுபடியும் நடால் :
இம்முறையும் பைனலில் நடாலிடம் ஜோகொவிகிற்கு தோல்வி. நடால் 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
2015: இப்போது நடால் இல்லை ஆனால் ....?
நம்பர் 1 ஜோகோவிக் , தன் பிரெஞ்ச் ஓபன் எதிரியை, நடாலை காலிறுதியில் தோற்கடித்து, ஆண்டி முர்ரேய்யை செமிபைனலில் , இரண்டு நாட்கள் நடந்த 5 செட் மேட்சில் வென்று பைனலுக்கு முனேறினால் அங்கு ஜோகொவிக்கை வாவ்ரின்கா 4 செட்களில் தோற்கடிக்கிறார்.

கடந்த பத்து வருடங்களாக பிரெஞ்ச் ஓபெனில் நுழைந்ததுமுதல், (ஜோகோவிக் உலகின் நம்பர் 1 வீரராக ஆனபின்னும்), அவரால் இன்றுவரை சாம்பியனாக முடியவில்லை .

இந்த இம்முறையாவது ஜோகோவிக் பிரெஞ்ச் ஓபன் ஜெயிப்பாரா ??

பிரெஞ்ச் ஓபன் 2016 , செரீனா வில்லியம்ஸ் வசமாகுமா ??கிளிக் செய்யவும்

THANKS: Pictures shown here are adopted from world wide web sources.

enjoy... it is reloading the happiness..