7 1 2 3 5 6 4

மகளிர் பிரெஞ்ச் ஓபன் 2016 , செரீனா வில்லியம்ஸ் வசமாகுமா ??

பெங்களூர் மே 22,2016
மூன்று முறை வென்ற ( 2002, 2013, 2015) செரீனா வில்லியம்ஸ் இம்முறை 2016-ல் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து கொள்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி??
கடந்த வருடம் Goldan slam / calendar slam வெல்வார் , ஸ்டெபி கிராப் சாதனயை சமன்
செய்வார் என்று எதிர் பார்க்கப்பட்டபோது US OPEN 2015 –ல் தோல்வி அடைந்தது , டென்னிஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி , மேலும் இந்த வருடம் 2016 ஆரம்பமே செரீனாவுக்கு தோல்விதான் ஆஸ்திரேலியன் ஓபெனில் ஜெர்மானிய வீராங்கனை கேர்பேரிடம் (Angelique Kerber) தோற்றார் . கடந்த 8 மாதங்களில் எந்தவித வெற்றியும் அடையாத செரீனா , இந்த வருடம் 2016 French Open பட்டத்தை தக்கவைத்து கொள்வாரா .

French open 2016-ல் அவர் எதிர் கொள்ள போகும் சில முக்கியமான வீராங்கனைகள் பற்றி கீழே பார்ப்போம் .


1.Angelique Kerber:

இந்தாண்டு 2016 ஆஸ்திரேலியன் ஓபெனில் , செரீனாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம்வென்று அதிரவைத்தவர் , செரினா இந்தாண்டாவது நான்கு Grand Salm போட்டிகளையும் வென்று ஸ்டேபி கிராப் (Steffi Graf ) சாதனைகளை சமன் செய்வார் என்ற எதிர்பார்ப்பை தகர்த்தவர் . கேர்பேர் இந்தாண்டு 2016 பிரெஞ்ச் ஓபன் பட்டம் வெல்வாரா ??
கேர்பேர், இந்தாண்டு, இதுவரை ஸ்டுட்கார்டில் நடந்த போட்டியில் வென்றாலும் , ரோம் மற்றும் மாட்ரிட் போட்டிகளில் தோற்றார் . இந்த மூன்று களங்களும் பிரெஞ்ச் ஓபன் போலவே களிமண் களங்கள் (clay courts) . தற்போது 28 வயதாகும் இவர் இதுவரை இங்கு காலிறுதியை தாண்டாதவர் . Barbora Strycova . Eugenie Bouchard போன்றவர்களை வென்று காலிறுதியை கடந்தால். செரீனாவை அரையிறுதியில் எதிர் கொள்ளலாம்

2.Garbiñe Muguruza:

ஸ்பானிய வீராங்கனை முகுருசா (Garbiñe Muguruza) 2015-ல் பல வெற்றி களை கண்டவர. .பிரெஞ்சு ஓபெனில் 2014 ல் காலிறுதியை கண்டவர் , 2015-ல் இறுதிவரை வந்து செரினாவிடம் தோற்றவர் , 2016-ல் இதுவரை எந்தொரு வெற்றியும் காணதவர் . கடந்த மாதம் ரோமில் நடந்த போட்டியில் அரையிறுதி வரை வந்தது ஒரு ஆறுதல் . இம்முறை பிரெஞ்சு ஓபெனில் காலிறுதிவரை எதிர் பார்க்கலாம்


3.Simona Halep:

24வயதாகும் ரோமானிய வீராங்கனை ஹலேப் , 2014-ல் இறுதி சுற்று வரை வந்தவர் .அவருக்கு எதிரி அவரே. எப்போது எப்படி விளையாடுவார் என்று யாருக்கும்தெரியாது . இன்றைய சாம்பியன் நாளையே முதல் ரௌண்டில் தோற்றுவிடுவார் . The inconsistency is a bigger issue. அவரின் நிலையற்ற தரமே அவரின் வீக்னஸ் .
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாட்ரிட் போட்டியை வென்றவர் , அடுத்து நடந்த ரோம் போட்டியில் முதல் சுற்று லேயே வெளியேறினார். 2014 பிரெஞ்ச் ஓபன் இறுதிவரை வந்தவர் 2015- ல் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறினார் . இதுவரை எந்தவொரு Grand Salm பட்டதை வெல்லாதவர் இந்தவருடம் அரையிறுதி வரை வரலாம்



4.Agnieska Radwanska:

2006ஆம் ஆண்டின் பிரெஞ்சு ஜூனியர் சாம்பியன் கடந்த வருடம் WTA ( செரீனா பங்கேற்காத ) பைனலை வென்றவர் , இதுவரை எந்தவொரு grand slam பட்டம் வெல்லாதவர் . ஆனால் போராடும் குணம் இவரை அரையிறுதி வரை கொண்டு செல்லும்.




செரீனா வில்லியம்ஸ்க்கு எதிரான அதிரி –புதிரி வீராங்கனைகள் :

1. வீனஸ் வில்லியம்ஸ்:
36 வயதாகும் வீனஸ் நன்றாகவே விளையாடினாலும் 2016 அவருக்கு நல்ல துவக்கத்தை தரவில்லை. கடந்த பத்து வருடங்களில் பிரெஞ்ச் ஓபெனில் காலிறுதியை எட்டாதவர்
2. ஜோஹன்னா கொண்டா ( Johanna Konta)
பிரிட்டனின் நம்பர் 1. ஆனால் களிமண் களம் அவருக்கு சுகமில்லை . ஆனால் கடந்த மாத ரோம் போட்டியில் அடைந்த வெற்றி இவரை 2016 பிரெஞ்ச் ஓபெனில் காலிறுதிவரை எதிர்பார்க்கலாம்

3. மடிசன் கெய்ஸ் (Madison Keys )
இந்த 12ஆம் நிலை அமெரிக்க வீராங்கனை கடந்த மாதம் ரோம் பைனல்ஸில் செரீனாவிடம் தோற்றவர் . இம்முறை பிரெஞ்ச் ஓபெனில் அரையிறுதி வரை எதிர்பார்பார்கலாம் .

இதுவரை 21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்று , இந்த முறை 2016 french open championship வெல்வதின் மூலம் Stefi Graff-ன் சாதனையை சமன் செய்ய காத்திருக்கும் செரீனா வில்லியம்ஸை , பைனல்ஸில் எதிர் கொள்ளபோவது யார் ??


என்னுடைய கண்ணிப்பு : பைனலில் செரீனா , ராத்வான்ச்காவை வென்று சாதனை படைப்பார்
Prediction: Radwanska to reach the final and be easily beaten by Williams and claim her 22nd grand slam and equal Steffi Graf's haul


டென்னிஸ் விளையாட்டின் தரத்தை புரிந்து கொள்ள சில தகல்வல்கள்

1. ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்
(Margaret Court) 1970-ல் நான்கு கரண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்று Golden Slam வென்றவர் , 24 சிங்க்ள்ஸ் பட்டங்கள் வென்ற முதல் சாதனை பெண் ஆவார்.

2. Stefi Graff 22 சிங்க்ள்ஸ் பட்டங்கள் வென்று 1988-ல் நான்கு கரண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்று Golden Slam வென்றவர். “open era” வின் முதல் சாதனையாளர்

3. ஆஸ்திரேலியன் ஓபன் , பிரெஞ்ச் ஓபன் , விம்பிள்டன் , அமெரிக்க ஓபன் போட்டிகளை ஒரே வருடத்தில் ஒருவரே வென்றால் Golden Slam / Calendar Slam பட்டம் வென்றதாகும்

4. கடந்தாண்டு மற்ற மூன்று போட்டிகளிலும் வென்று அமரிக்க ஒபனில் தோற்று GoldenSalm பட்டத்தை தவற விட்ட செரீனா , இதுவரை 21 கிராண்டஸ்லாம் பட்டங்கள் வென்றவர். இம்முறை பிரென்ச் ஓபன் பட்டம்வென்று ஸ்டெபியின் சாதனையை சமன் செய்வார் என்று உலகமே எதிர்பார்கின்றது.

5. OPEN ERA என்பது 1968 முதல் தொழில் முறை ஆட்டகரர்களை அனுமதித்து Grand slam ( டேவிஸ் கப் உட்பட ) போட்டிகள் நடைபெற்று வருகின்றது . 1968 பிரெஞ்ச் ஓபன் தான் முறை ஆட்டகரர்களை அனுமதித்து Open Era வை தொடங்கி வைத்தது





பிரெஞ்ச் ஓபெனில் (Roland Garros) ஜோகொவிக்கின் கடந்த 10 வருட ஏமாற்றங்கள் :,கிளிக் செய்யவும்

THANKS: Pictures shown here are adopted from world wide web sources.

enjoy... it is reloading the happiness..