7 1 2 3 5 6 4

மேவன் (MEVAN) நமக்கு நல்லதா, கெட்டதா?

“இந்தியாவும் அமெரிக்காவும்,பரஸ்பர நல்லுறவுடன் பூமியில் மட்டுமல்ல செவ்வாய் கிரகத்திலும் இருக்கின்றன , அமெரிக்கா கடந்த 22ஆம் தேதி செவ்வாயில் இறங்கினார்கள், நாம் 24ஆம் தேதி இறங்கினோம்” என்று நமது பிரதமர் திரு.மோடி, நியூயார்க் மாடிசன் அரங்ககத்தில் கடந்த ஞாயிறு (28/09/2014) பல்லாயிரகணக்கான இந்தியர்கள் முன் உரையாற்றினார் பிரதமர் குறிப்பிட்டது “மேவன்” –MEVAN என்ற அமெரிக்க விண்கலம், நமது மங்கல்யானுக்கு முன்னால் செவ்வாயில், சென்றடைந்ததை தான் குறிப்பிட்டார்.
மேவன் என்றால் ??? MAVEN: Mars Atmosphere and Volatile EvolutioN Mission:
மேவன் என்பது, அமெரிக்காவின் விண்கலம், நமது மங்கல்யான் போலவே செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்டது.
இந்த இரண்டு விண்கலங்களும் ஒரே நேரத்தில் செவ்வாயை சென்றடைந்ததால், பலவித சர்ச்சைகள், ஒப்பிடுதல்கள் ஏற்ப்பட்டன.
மேவன் நமது மங்கல்யனுக்கு எதிரி என்ற விதத்தில் கருத்துகளும் நிலவுகின்ற஁


நாம் அதை கொஞ்சம் விரிவாக பார்க்கலாமே
மேவன் நவம்பர் 18,2013 ல் விண்ணில் ஏவப்பட்டு, 150கிமீ தூரத்தில் செவ்வாய் கிரகத்தில் செப்டம்பர் 22,2014-ல் நிலை நிறுத்தப்பட்டது, 671மில்லியன் டாலர் திட்டமதிப்புள்ள மேவன் விண்கலம் அமெரிக்காவின் 10வது செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட விண்கலமாகும் ( இதற்கு முன்னால் மூன்று முறை தோல்வியடைந்தது வேறு விஷயம் )

அக்டோபர் 01,2013-ல் ,அமெரிக்க கஜானா காலி என்று (US government shutdown), அமெரிக்கவே ஸ்தம்பித்த நிலையில், மேவன் விண்ணில் ஏவ, ஏழு வாரங்களே இருந்தன. டிசம்பர் 7க்குள் விண்ணில் ஏவ முடியாவிட்டால், செவ்வாய் தன நீள் வட்ட பாதையில் தொலை தூரம் செல்வதால் முழுமையான திட்டமும் வீணாகும் நிலை. பின்னர் இரண்டு நாளில் NASA மேவன் திட்டம் அவசரமும், அவசியமும் என்று அறிவித்தது.

இதற்கு முக்கிய காரணம், ஏற்கனவே செவ்வாயில் இருக்கும் Opportunity and Curiosity விண்கலங்கள் நவம்பர் 2014-ல் செயலிழக்கும். நிலயில் இருந்தன. அமெரிக்க அரசு NASAவிற்கு உடனடி நிதி சாங்க்ஷன் செய்தது. இதனால் மேவன் திட்டம், திட்டமிட்டபடி நடந்து விண்கலம் செவ்வாயையும்சென்றடைந்தது.

அக்டோபர் 2013-ல் நிதி நெருக்கடியிலும், NASA நமது மங்கல்யான் திட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்து தனது தரை கட்டுப்பாடு நிலையங்கள், மங்கல்யானின் சிக்னல்களை வாங்கி நமக்கு அனுப்பும் என்று உறுதியளித்தது. ( மங்கல்யான் செவ்வாய் சென்றடைந்து அரை மணி நேரத்தில் Canberraவிலிருந்து NASA, மங்கல்யான் செவ்வாய் சென்றடைந்ததை உறுதி செய்தது ).


நாசா நமக்காக அதன் அன்டனாக்களை உபயோகிக்க அனுமதியளித்துள்ளது .
அக்டோபர் 2013லேயே ISRO தலைவர் திரு.ராதாகிருஷ்ணன், மேவனும், மங்கல்யானும் வெற்றி பெற்றால் , இரண்டும் ஒன்றுகொன்று உதவிக்கொள்ளும் என்றார்.
மங்கல்யானின் செயல் திட்டம்வேறு, மேவனின் செயல் திட்டம் வேறு.
நமது மங்கல்யான் அனுப்பியதே, நம்மாலும் செவ்வாயை தொடமுடியும் என்று காண்பிக்கத்தான்.
எனவே மேவன் நமது நண்பனே இதற்கேற்றாற்போல், இரண்டும் செவ்வாயை சென்றடைந்தவுடன், நமஸ்தே , howdy என்று ட்ட்வீட்டி கொண்டனMy sincere thanks to NASA for the pictures and video displayed here.


for more details read this in English

மங்கல்யான்- தெரிந்ததும் , தெரியாததும் ..

enjoy... it is reloading the happiness..