7 1 2 3 5 6 4
ரோஜர் பெடரெர் சாதிப்பாரா??

விம்பிள்டன் கோப்பை யாருக்கு ??

பெங்களூர் செவ்வாய் ,ஜூன் 30,2015
விம்பிள்டன் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதன் கண்ணியமிக்க பாரம்பரியமும், கம்பீரமும். பல தலைமுறைகளால் காக்கப்பட்டு வரும் கட்டுப்பாடும் ஒழுக்கமும். அதில் விளையாடும் வீரர்கள், வீராங்கனைகள் வெள்ளை நிற உடுப்பு, விளம்பரமில்லா டென்னிஸ் கோர்ட்டுகள் , வீரர்களை மிக்க மரியாதையோடு அழைக்கும் பாங்கு, ATP ராங்கிங் விடுத்து தனக்கென்று தர வரிசை பட்டியலை நிர்ணையிக்கும் முறை என்று தனித்தன்மையுடன் விளங்கும் வருடாந்தர டென்னிஸ் பந்தயங்கள் தான். இதில் சிங்கிள்ஸ் கோப்பை வெல்வது அவ்ளவு எளிதல்ல .
இந்த வருட விம்பிள்டன் தர வரிசை பட்டியலில் முதல் நான்கு வீரர்களில், யார் இந்த வருடம் வெல்வார் என்று கணிப்பது கடினமானது. முதல் பத்து வீரர்களில் யார் செமி பைனல்ஸ் வருவார் என்று கணிப்பது மரபு. நோவக் ஜோகோவிக் (1), ரோஜர் பெடரர் (2), ஆண்டி முர்ரே (3), ஸ்டான் வவ்ரின்கா (4) என்பவர்களில் யார் சிங்கிள்ஸ் கோப்பையைக் கைபற்றுவார்??
நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிக் செமிபைனல் வரை வருவது எளிது. அவர் இருக்கும் குரூப்பில், மற்ற முவர் இல்லை. ஆனால் முன்னாள் சாம்பியன்கள், பேட்ரிச், சோங்கா ஆகியோரை, எதிர்கொள்ள வேண்டியிருக்கும் . ரோஜர் பெடரர் (2), ஆண்டி முர்ரே (3), ஸ்டான் வவ்ரின்கா (4) மற்றும் இந்தவருடம் 10ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட நடால் ஆகியோர் இரண்டாம் குருப்பில் இருக்கின்றனர். மிகவும் கடினமான போட்டிகள் நிறைந்தது.. இதன் படி, நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிக, ஸ்டான் வவ்ரின்காவை , செமிபைனலில் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் . இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, புக்கிகளால் யுகிக்கபட்ட போட்டி. கரணம், இரண்டு வாரம் முன்னர் தான் வவ்ரின்கா, ஜோகொவிக்கை , பிரெஞ்சு ஓபெனில் தோற்கடித்து கோப்பை வென்றார். (பார்க்க வீடியோ படம்)

இந்த வருட விம்பிள்டன் கப் வெல்வது யார் ???
“எப்போதும் எதிரி “(the arch rivals ) ஜோகோவிக்கும், பெடரரும் இம்முறை, விம்பிள்டன் பைனலில் மோதிக்கொள்ளுவார்கள் என்று உலகம் முழுவதுமுள்ள டென்னிஸ் ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகின்றது.. கடந்தவருடம் 2014- பைனலில் ஐந்து செட்கள் போராடி ஜோகோவிக்கிடம், பெடரர் தோற்று வெளியேறினார்.. இந்தவருடம் ,இரண்டு முறை சாம்பியன், ரெபெல் நடால் தரவரிசை பட்டியலில் 10ஆம் இடத்திற்கு தள்ளபட்டுருக்கிறார் , இவர் 2013-ஆம் வருட சாம்பியன் ஆண்டி முர்ரே வை கால் இறுதியில் சந்திக்க வேண்டியிருக்கும். கடந்த வாரம் ஏழாவது முறையாக QUEEN’S CLUB கோப்பை வென்ற ஆண்டி முர்ரே நடாலை தோற்கடித்து, செமிபைனலில் பெடரருடன் மோத வேண்டியிருக்கும்2015 பிரெஞ்சு ஓபெனில் இரண்டாம் இடம்பெற்ற ஜோகொவிற்கு முதல் மரியாதை
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாரிஸில் நடந்த பிரெஞ்சு ஒபன் பைனலில் ஸ்டான் வவ்ரின்காவிடம் தோற்ற ஜோகொவிற்கு , ரசிகர்கள் தந்த முதல் மரியாதை - STANDING OVATION.


ஜோகோவிக் வெற்றி பெறுவாரா?? பிரெஞ்சு ஓபெனில் தோற்கடிக்கப்பட்டு இந்த வருடம் எல்லா GRANDSLAM வெற்றி பெரும் வாய்ப்பை இழந்த ஜோகோவிக் ,விம்பிள்டன் கப்பை தக்கவைக்க பாடு படுவார். இந்த வருடம் இவர் விளையாடிய 44 மாட்ச்களில் மூன்று முறை தோற்கடிக்க பட்டுள்ளார் (பிரெஞ்சு ஓபன் உள்பட ) இப்படி கடந்த 2011-ல் பிரெஞ்சு ஒபென்லில் பெடரரிடம் தோற்ற இவர், அதன் பின்னர் அந்த வருடம் 41 மாட்ச்களில் தொடர் வெற்றி பெற்றார்.
சாதிப்பாரா பெடரர் ?? இந்த வருட விம்பிள்டன் வெற்றி புதிய சாதனையை பெடரருக்கு அளிக்கும். அவர் பெறவிருக்கும் எட்டாவது வெற்றி PETE SAMPRAS ஐ முந்த வைக்கும். கடந்த வருடம் விம்பிள்டனில் இழந்த வெற்றியை இமுமுறை பெற்று சாதனை படைப்பதில் முனைப்பாக இருக்கிறார். SW19 ராஜாவாக எப்போதும் பெடரரர் தான்.
கடந்த வாரம் ஜெர்மனியின் Halle-வில் கிடைத்த வெற்றி பெடரருக்கு மேலும் தெம்பு அளித்திருக்கிறது.. எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 34 வயதை எட்டும் பெடரர் ,இந்த விம்பிள்டன்னை வென்றால், அவர் தான் அதிக வயதில் சாதனை படைத்தவர் ஆவார் . ஆர்தர் ஆஷ் 1975 விம்பிள்டன்னை வென்றபோது அவருக்கு வயது 31 வருடம், 11 மாதம். ரோஜெர் பெடரர் தனது ஓய்வை (RETIREMENT FROM TENNIS) அறிவிப்பாரா ??. இந்த சாதனை படைத்த பின்னர் தான் தெரியும். .ஆண்டி முர்ரே (3), மற்றும் ஸ்டான் வவ்ரின்கா (4)
2013-ஆம் வருட விம்பிள்டன் சாம்பியன் (விமபிள்டன் வரலாற்றின் முதல் பிரிட்டிஷ் வீரர் ) ஆண்டி முர்ரே, 2014-ஆம் வருடத்தில் கடுமையான முதுகு வலியினால் விம்பிள்டனில் காலிறுதியை தாண்டமுடியவில்லை. ஆனால் கடந்த வாரம் பெற்ற QUEEN’S CLUB தொடர் வெற்றி அவருக்கு மனோ திடத்தை கொடுத்திருக்கிறது. தான் இந்தவருடம் விமபிள்டன் சாம்பியன் ஆவேன் என்கிறார். 2013-ஆம் வருட ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியன், 2015-ஆம் வருட பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டங்கள் வென்ற வாவ்ரின்கா, இதுவரை விம்பிள்டனில் காலிறுதியை தாண்டியதில்லை. ஆனால் இந்த வருட பிரெஞ்ச் ஒபென்லில் பிரேக் பாய்ண்ட்ஸ்களில் போராடிய வாவ்ரின்கா, விமபிள்டன் செமிபைனலில் , பெடரருடன் மோதுவார் என எதிர் பார்க்கலாம். பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த நடால்,( இரண்டு முறை விமபிள்டன் சாம்பியன் ) இம்முறை தரவரிசை பட்டியலில் 10-ஆம் இடத்திற்கு தள்ளபட்டுள்ளார். எனவே அவரை பற்றிய விமர்சனம் தேவையில்லை.


யார் இம்முறை SW19-ன் சாம்பியன் ??
எனது சாய்ஸ்: சாதனை படைக்க போகும் ரோஜெர் பெடரர்மறக்க முடியாத ஏழு விமபிள்டன் மேட்ச்சுகள்

நன்றி: ஹிந்து சுதர்சன்

1975: வெள்ளை நிறம் எப்போதுமே விம்பிள்டன்னை ஆண்டதுண்டு. விளையாடும் வீரர், வீராங்கனைகள் எப்போதும் வெள்ளை நிற உடை அணிய வேண்டும். ( கடந்த சில வருடங்களுக்கு முன்னால் செரீனா வில்லியம்ஸ் இதற்காக பைன் கட்டினார் ) பந்து பொறுக்குபவர்கள் (BALL BOYS) மற்றும் அம்பையர்கள் நேவி ப்ளுவும், கிரிம் நிற யுனிபார்ம் அணிய வேண்டும்.. ஆனால் நிறம் பற்றி அதிகம் பேசப்பட்டது, 1975-ல் ஆர்தர் ஆஷ் , ஜிம்மி கானர்சை தோற்கடித்து பட்டம் வென்றபோதுதான். அவர்தான் முதல் ஆப்ரிக்க-அமெரிக்கர். மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார் . ஆனால் அவ்வருடமே சிறந்த மனிதாபிமான விருது ATPயினால் அவர் பெயரில் நிறுவப்பட்டது..

1980: பியோன் போர்க் - ஜான் மெக்கன்ரோ. என்றாலே நினைவிற்கு வருவது, 1980 விமபிள்டன் பைனல் மேட்ச் தான். நாலாவது செட்டின் டை பிரேக்கரில் 22 நிமிட போராட்டதிற்குப்பின் , ஐந்து மேட்ச் பாயிண்ட்டை தவிர்த்து, ஜான் மெக்கன்ரோ.,ஐந்தாவது செட்டுக்குள் நுழைந்தார். ஆனால் இறுதியில் வென்றது, பியோன் போர்க், ஐந்தாவது முறையாக. இன்றுவரை பியோன் போர்க்” Mr.COOL” என்று பேசப்பட்டு வருகின்றார்1985: 17வது வயதில், ஆந்த்ரே அகாசி, பீட் சாம்ப்ராஸ், ரோஜெர் பெடரர் விம்பிள்டனில் நுழைந்த சாம்பியன்கள், ஆனால் அந்த வயதில் முதல் சுற்றிலேயே ஆட்டமிழ்ந்தவர்கள். 17வயதில் நுழைந்து சாம்பியன் பட்டம் பெற்றவர் போரிஸ் பெக்கர் . இது நடந்தது 1985-ஆம் ஆண்டில்.. அவர் தான் தரவரிசை பட்டியலில் இடம் பெறாத, இளம் வயதினிலே (17) முதல் சாம்பியன். யாராலும் நினைத்துபார்க்க முடியாத ரெகார்டை ஏற்படுத்தியவர். தற்போது ஜோகொவிக்கின் தலைமை கோச்.
1988: 1982 முதல் 1987 வரை மார்டினா நவரதினலோவா விம்பிள்டனின் சாம்பியன். யாராலும் அசைக்கமுடியதவர் என்று பெயரெடுத்தவர் ஒரு முறை நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை, “ விமபிள்டன் போட்டிக்கு பரிசளிக்க கென்ட் கோமகன் வருவரோ இல்லையோ , நவரதினலோவா , பரிசு வாங்க வந்திருப்பார்” என்று கமன்ட் அடித்தது. ஆனால் அவர் 1888-ல் 19 வயது இளம் ஜெர்மன் ஸ்டேபி கிராப்பால் தோற்கடிக்கப்பட்டார். இந்த வெற்றி ஸ்டெபிக்கு நாலு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளையும் வெல்ல வழி வகுத்தது
2001: 1990களில்,பத்தாண்டு காலத்திற்கு ஏஸ் மிஷின் (ACEMACHINE) என்று வர்ணிக்கப்பட்டவர் கோரன் இவாநிச்விக் (Goran Ivanisevic) அவர் போடுன் செர்விஸ்கள்ளெல்லாம் ACEதான் . அதுவும் முதல் சர்விசைவிட இரண்டாம் செர்வீஸ் வேகமிக்கது. விம்பிள்டனில் முன்று முறை பைனல்ஸ் வரை வந்தவர். 2001-ஆம் ஆண்டு தரவரிசையில் 120-ம் இடத்திற்கு தள்ளபட்டார். ஆனால் அந்தாண்டு “WILD CARD” முறையில் நுழைந்து சாம்பியன் பட்டம் வென்றார்
2001: 2001-ல் ரோஜெர் பெடரர் , பீட் சாம்ப்ராசை, நாலாவது ரௌண்டில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றபோது, எல்லோரும் பெடரரை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்கள். இன்றுவரை விம்பிள்டனின் முடி சூடா மனனனாக இருக்கிறார் ஆனால் ஆட்டமுறையே மாறிவிட்டது. பெடரர்-சாம்ப்ராஸ் மேட்சின் பொது 254முறை சர்வ-வாலி விளையாடப்பட்டது 2009 பைனலில் பெடரர் ஆண்டி ரோடிகை ஐந்து செட்களில் தோற்கடிகபட்டபோது 11 முறையே சர்வ-வாலி விளையாடப்பட்டது. இது பெடரரின் தப்பல்ல. காலம் விளையாட்டின் முறையையே மாற்றி விட்டது.  இப்போது கிரிக்கட்டில் T-20வரவில்லையா என்ன.


2008: பிரெஞ்சு ஒப்னையும், விம்பிள்டனையும் ஒரு சேர வெல்வது மிக பெரிய சாதனை. இரண்டு வார இடைவெளியில் மெல்லவும், அதிகம் மேலெழும்பும் ( slow and bouncy clay pitch) ஆடுகளத்திலும், வழுக்கும் புல் தரையிலும் விளையாடி சாம்பியன் பட்டம் பெறுவது எளிதான காரியமல்ல. இந்த சாதனையை பியோன் போர்க் தொடர்ந்து முன்று ஆண்டுகள் சாதித்தார். (1978, 79 and 80). இதற்காகவே இன்றும் நம்மனதில் இருக்கின்றார். 2008-ல் நடால் பெடரரை தோற்கடித்து இந்த சாதனை படைத்தார்


to read this in english click here

enjoy... it is reloading the happiness..